Published : 17 Aug 2018 08:34 AM
Last Updated : 17 Aug 2018 08:34 AM

கனமழை, வெள்ளம், நிலச்சரிவினால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிப்பு: கேரளாவில் முப்படை வீரர்கள் மீட்புப் பணியில் தீவிரம்; பலி எண்ணிக்கை 75-ஆக உயர்வு

கேரளாவில் வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்காக ராணுவம், விமானப்படை, கடற் படை என முப்படையைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வீரர்கள் அம் மாநிலத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, அம்மாநிலத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 75-ஆக உயர்ந்துள்ளது.

கேரளாவில் கடந்த 8-ம் தேதி முதல் மிக பலத்த மழை பெய்து வருகிறது. வரலாறு காணாத இந்த மழை காரணமாக, இடுக்கி, கோழிக்கோடு, காஸர்கோடு உள் ளிட்ட மாவட்டங்களில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வெள் ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். மேலும், மழை காரணமாக கொச்சி விமான நிலைய சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

பல்வேறு மார்க்கங்களில் ரயில் சேவையும் நிறுத்தப்பட்டிருக்கிறது. தொடர் மழையால் கேரளாவில் உள்ள முல்லைப் பெரியாறு உள்ளிட்ட அணைகள் நிரம்பியதை அடுத்து, அவற்றிலிருந்து உபரி நீர் வேகமாக வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், அங்குள்ள பல்வேறு மாவட்டங்களில் மேலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, கனமழை காரண மாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி நேற்று 8 பேர் உயிரிழந்தனர். இதனால், மாநிலத்தில் பலி எண்ணிக்கை 75-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலை யில், கேரளா முழுவதும் லட்சக் கணக்கானோர் வெள்ளத்தில் சிக்கி வெளியேற முடியாமல் தவித்து வருவதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த தகவலின்பேரில், கேரளாவுக்கு முப்படைகளைச் சேர்ந்த ஆயிரக் கணக்கான வீரர்களை மத்திய அரசு அனுப்பியுள்ளது. அவர்கள், ஹெலிகாப்டர், சிறிய ரப்பர் படகு கள் மூலமாக வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்டு வரு கின்றனர். மேலும், வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ளவர் களுக்கு ராணுவ ஹெலிகாப்டர் கள் மூலமாக குடிநீரும், உணவுப் பொருட்களும் விநியோகிக்கப் பட்டு வருகின்றன.

கேரளாவில் மழை வெள்ளத் தில் சிக்கியுள்ள பலர், தங்களைக் காப்பாற்றக் கோரி சமூக வலை தளங்களில் கோரிக்கை விடுத்து வருகின்றனர். கோழிக்கோடு, கண்ணூர், காஸர்கோடு, இடுக்கி உள்ளிட்ட பல மாவட்டங்களில் நாளுக்கு நாள் வெள்ள பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தப் பகுதிகளில் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால், இங் குள்ள மக்கள் வெளியேற முடியா மலும், உணவுக்கு வழியின்றியும் தவித்து வருகின்றனர். பல வீடுகள், வெள்ளத்தில் பாதியளவு மூழ்கி யுள்ளதால் அவற்றில் வசித்து வருபவர்கள் மொட்டை மாடிகளில் தஞ்சமடைந்திருக்கின்றனர். இந் நிலையில், அதுபோன்ற சூழ்நிலை யில் இருப்பவர்கள், தங்களைக் காப்பாற்றக் கோரி வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். கடந்த 3 நாட்களில் மட்டும் இதுபோன்று நூற்றுக்கணக்கான வீடியோக் கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. இதையடுத்து, அவர்களை மீட்கும் பணிகள் தற்போது முடுக்கிவிடப் பட்டிருப்பதாக மாநில அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிதியுதவி அளிக்கக் கோரி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் நேற்று வெளியிட்ட பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:

மழை மற்றும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் கேரள மக்களை நினைத்து மிகவும் வருந்துகிறேன். ஆயிரக் கணக்கானோர் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர். நிவாரண முகாம் கள் நிறைந்துள்ளன. நூற்றுக் கணக்கானோர் தங்களின் அன்புக் குரியவர்களை இழந்து தவிக் கின்றனர். இவ்வாறு, இயற்கையின் கோரப்பிடியில் சிக்கி தவிக்கும் கேரள மக்களுக்கு உதவி செய்ய நாம் அனைவரும் முன்வர வேண்டும். இதற்காக, கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு நாம் தாராளமாக பண உதவி அளிக்க வேண்டும் என அந்தப் பதிவில் ராகுல் காந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்நிலையில், கேரளாவில் வெள்ள நிலவரம், நிவாரணப் பணிகள் மற்றும் மீட்பு நட வடிக்கைகள் குறித்து டெல்லியில் மத்திய அமைச்சரவைச் செயலர் பி.கே.சின்ஹா தலைமையில் உயர்நிலை ஆலோசனைக் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

பிரதமரின் அறிவுறுத்தலின் பேரில் நடைபெற்றதாகக் கூறப் படும் இந்த ஆலோசனைக் கூட் டத்தில் மத்திய உள்துறைச் செயலர் ராஜீவ் கவுபா உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதனிடையே, கேரளாவில் வெள்ள நிலவரம் குறித்து முதல்வர் பினராயி விஜயனை பிரதமர் நரேந்திர மோடி நேற்று காலை தொலைபேசி தொடர்புகொண்டு ஆலோசனை நடத்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x