மனைவியை பணயமாக வைத்து சூதாடிய கணவன் மீது வழக்கு

பிரதிநித்துவப் படம்
பிரதிநித்துவப் படம்
Updated on
1 min read

லக்னோ: உத்தர பிரதேசத்தில் மனைவியை பணயமாக வைத்து சூதாடிய கணவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் கூறும்போது, ‘‘மீரட்டில் கிவாய் கிராமத்தைச் சேர்ந்த டானிஷ் என்பவரை கடந்தாண்டு அக்டோபர் 24-ல் திருமணம் செய்து கொண்டேன். அப்போதே குடிபோதையில் என்னை வைத்து சூதாட ஆரம்பித்துவிட்டார். எதிர்த்து கேட்டதற்கு அவரும், என்னுடைய மாமியாரும் சேர்ந்து அடித்து உதைத்தனர்.

என் கணவர் சூதாட்டத்தில் தோற்றதால் எட்டு பேர் என்னை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி உள்ளனர். பலமுறை அபார்ஷன் செய்ததுடன், ஆசிட் ஊற்றியும், ஏரியில் தள்ளியும் கொலை செய்ய முயன்றனர்’’ என்றார்.

உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் கொடுமைப் படுத்தியதாக அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில் பினோலி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in