பிஹார் பேரவையை கலைக்க நிதிஷ் பரிந்துரை 

பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் நேற்று ஆளுநர் ஆரிப் முகமது கானை சந்தித்து இப்போதைய சட்டப்பேரவையை கலைப்பதற்கான பரிந்துரையை சமர்ப்பித்தார்.படம்: பிடிஐ
பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் நேற்று ஆளுநர் ஆரிப் முகமது கானை சந்தித்து இப்போதைய சட்டப்பேரவையை கலைப்பதற்கான பரிந்துரையை சமர்ப்பித்தார்.படம்: பிடிஐ
Updated on
1 min read

பாட்னா: பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்​டணி 202 இடங்​களில் வென்று ஆட்​சியை தக்​க​வைத்​துக் கொண்​டது.
இந்​நிலை​யில், இப்​போதைய அமைச்​சர​வை​யின் கடைசி கூட்​டம் முதல்​வர் நிதிஷ் குமார் தலை​மை​யில் நேற்று நடை​பெற்​றது. இதில், சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் அமோக வெற்றி பெற்​றதற்​காக நிதிஷ் குமாருக்கு அமைச்​சர்​கள் வாழ்த்து தெரி​வித்​தனர்.

பின்​னர் இப்​போதைய சட்​டப்​பேர​வையை கலைப்​பது என தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டது. இதன்​படி, முதல்​வர் நிதிஷ் குமார் ஆளுநர் ஆரிப் முகமது கானை நேற்று சந்​தித்​தார். அப்​போது சட்​டப்​பேர​வையை கலைப்​ப​தற்​கான பரிந்​துரை கடிதத்தை வழங்​கி​னார். இதன்​படி, வரும் 19-ம் தேதி சட்​டப்​பேரவை முறைப்​படி கலைக்​கப்​படும்.

இதையடுத்​து, புதிய அரசு அமைப்​ப​தற்​கான ஏற்​பாடு​கள் நடை​பெற்று வரு​கின்​றன. வரும் 20-ம் தேதி பாட்​னா​வில் உள்ள காந்தி மைதானத்​தில் நடை​பெறவுள்ள பிரம்​மாண்​ட​மான நிகழ்ச்​சி​யில் நிதிஷ் குமார் 10-வது முறை​யாக பதவி​யேற்க உள்​ளார். இந்​நிகழ்ச்​சி​யில், பிரதமர் மோடி, மத்​திய அமைச்​சர்​கள், பாஜக கூட்​டணி கட்​சிகள் ஆளும் மாநில முதல்​வர்​கள் உள்​ளிட்​டோர்​ பங்​கேற்​க உள்​ளனர்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in