

புதுடெல்லி: ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சியின் தலைவர் மதன் ஷா. இவருக்கு பிஹார் தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இதன் காரணமாக அவர் கடந்த மாதம் சட்டையை கிழித்துக்கொண்டு அழுது தனது விரக்தியை வெளிப்படுத்தினார். மேலும், ஆர்ஜேடி கட்சி 25 இடங்களுக்கு மேல் தேறாது என்ற சாபத்தையும் வழங்கினார். இவர் வயிறு எரிந்து விட்ட சாபத்தைப் போலவே ஆர்ஜேடி 25 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
இதுகுறித்து அவர் நேற்று கூறுகையில், “எனக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை என்ற மனவலி பைத்தியம்பிடிக்க வைத்துவிட்டது. எனது சாபத்தைப் போலவே சரியாக 25 தொகுதிகளில் மட்டுமே ஆர்ஜேடி வெற்றிபெற்றுள்ளது. எனினும், ஆர்ஜேடி படுதோல்வியை சந்தித்துள்ளது உண்மையில் எனக்கு மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது’’ என்றார்.