மிகவும் பாதுகாப்பான தேர்தல்: எப்போதும் இல்லாத சாதனை

மிகவும் பாதுகாப்பான தேர்தல்: எப்போதும் இல்லாத சாதனை
Updated on
1 min read

பாட்னா: பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் முதல்முறையாக இம்முறை வாக்குப்பதிவு நாளில் வன்முறை தொடர்பான உயிரிழப்பு ஏதுமில்லை. எந்தத் தொகுதியிலும் மறு வாக்குப்பதிவுக்கு உத்தர விடப்படவில்லை.

பிஹாரில் கடந்த சட்டப்பேரவை தேர்தல்களில் வன்முறை, உயிரிழப்புகள் ஏற்பட்டதும், மறுவாக்குப் பதிவுக்கு உத்தரவிடப்பட்டதும் அதிகாரப்பூர்வ தரவுகள் மூலம் தெரியவருகிறது. கடந்த 1985-ம் ஆண்டு தேர்தலில் 63 உயிரிழப்பு ஏற்பட்டு, 156 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப் பதிவுக்கு உத்தரவிடப்பட்டது. 1990-ம் ஆண்டு தேர்தல் வன்முறைகளில் 87 பேர் உயிரிழந்தனர்.

1995-ல் முன்னெப்போதும் இல்லாத வன்முறை மற்றும் முறைகேடுகள் காரணமாக பிஹார் தேர்தலை அப்போதைய தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் 4 முறை தள்ளி வைத்தார். 2005-ல் வன்முறைகள், முறைகேடுகள் காரணமாக 660 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப் பதிவு நடைபெற்றது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in