‘மோடியை பழிப்பது சுலபம்; ஆனால்…’ - ராகுலை விமர்சித்த ஆச்சாரிய பிரமோத் கிருஷ்ணம்

‘மோடியை பழிப்பது சுலபம்; ஆனால்…’ - ராகுலை விமர்சித்த ஆச்சாரிய பிரமோத் கிருஷ்ணம்
Updated on
1 min read

புதுடெல்லி: பிஹார் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள என்டிஏ கூட்டணியின் செயல்பாட்டை புகழ்ந்தும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை விமர்சித்தும் உள்ளார் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் உறுப்பினர் ஆச்சாரிய பிரமோத் கிருஷ்ணம்.

பிஹார் தேர்தலில் மீண்டும் ஆட்சி அமைக்கிறது பாஜக, ஜேடியு அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி. இந்நிலையில், பிஹார் தேர்தலை குறிப்பிட்டு வீடியோ ஒன்றை ஆச்சாரிய பிரமோத் கிருஷ்ணம் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

“மோடியை பழிப்பது மிகவும் சுலபம். ஆனால், மோடியாக இருப்பது மிக மிக கடினம். தேசத்துக்கு அர்பணிப்புடன் இருப்பவர்களால் மட்டுமே மோடியாக முடியும். உலகத்துக்கு பிஹார் மக்கள் ஒரு செய்தியை இன்று தெரிவித்துள்ளனர். நீங்கள் (ராகுல் காந்தி) மோடியை பழிப்பதையும், களங்கப்படுத்துவதையும் தொடர்ந்தால், அதை பிரதிபலிக்கும் கண்ணாடியை மக்கள் உங்களுக்கு காண்பிப்பார்கள்.

மோடியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதை இனியும் இந்திய மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in