

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி, சுமார் 13 லட்சத்து 25 ஆயிரம் போலி வாக்காளர்களை, வாக்காளர் பட்டியலில் சேர்த்துள்ளதாக பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி குற்றம்சாட்டியுள்ளார்.
மேற்கு வங்க எதிர்க்கட்சித் தலைவரும் பாஜக தலைவருமான சுவேந்து அதிகாரி மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் நேற்று முன்தினம் தலைமை தேர்தல் அதிகாரியைச் சந்தித்து, போலி வாக்காளர்களின் விவரங்கள் குறித்த நகல்களை சமர்ப்பித்தார். இது தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரியை சுவேந்து கேட்டுக்கொண்டார்.
அத்துடன், தற்போது மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர ஆய்வின் போது, மேற்கூறிய போலி வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் கொண்டு வர ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களும் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர் என்று சுவேந்து அதிகாரி குற்றம்சாட்டியுள்ளார்.