

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் 34 லட்சம் ஆதார் கார்டுதாரர்கள் தற்போது உயிருடன் இல்லை என்ற விவரத்தை தேர்தல் ஆணையத்திடம் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த ஆணையம் கூறுகையில், “ஆதார் அட்டை கடந்த 2009 ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது முதல் இந்த அடையாள அட்டையை பெற்ற 34 லட்சம் பேர் தற்போது உயிருடன் இல்லை. மேலும், இம்மாநிலத்தில் 13 லட்சம் பேர் ஆதார் அட்டைகளை வைத்திருக்கவில்லை. ஆனால், அவர்கள் இறந்துவிட்டனர்” என்று தெரிவித்துள்ளது.