

புதுடெல்லி: டெல்லியில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக போலீஸாருக்கு புதிதாக சிசிவிடி காட்சிகள் கிடைத்துள்ளன.
குண்டுவெடிப்பு சம்பவம் நடப்பதற்கு சில விநாடிகள் முன்பு ஆட்டோக்கள், இ-ரிக்சா உள்ளிட்ட வாகனங்களுக்கு இடையே வெடிகுண்டுகள் இருந்த ஐ20 கார் சாலையில் மெதுவாக நகர்ந்து வருகிறது. அப்போது காரிலிருந்த குண்டு வெடிக்கிறது.
அடுத்த சில விநாடிகளிலேயே மிகப்பெரிய தீப்பிழம்பு ஏற்பட்டு தீ மளமளவென அருகில் இருந்த கார்களுக்கு பரவுகிறது. அங்கிருந்து அதிக அளவிலான புகை வெளிவரும் அந்தக் காட்சியில் பதிவாகிறது. இந்தக் காட்சிகளை வைத்து என்ஐஏ அதிகாரிகள் தற்போது தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.