

புதுடெல்லி: டெல்லி தாக்குதலில் சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் உமர் முகமது, ஆதில் அகமது மற்றும் முஜம்மில் ஷகீல் ஆகியோர் ‘டெலிகிராம்’ சமூகவலைதளத்தில் இணைந்துள்ளனர். இந்த 3 பேரும் ‘ரேடிக்கல் டாக்டர்ஸ் குரூப்’ என்ற பெயரில் டெலிகிராம் வலைதளத்தில் சதி திட்டம் குறித்து விவாதித்து வந்துள்ளனர்.
இவர்களில் உமர். முஜம்மில் ஷகீல் இருவரும் மிக நெருங்கிய நண்பர்கள். இருவருமே புல்வாமாவை சேர்ந்தவர்கள். இவர்களுடைய டெலிகிராம் கணக்கை, டெல்லி வெடிகுண்டு தாக்குதலுக்கு 15 நாட்களுக்கு முன்பாகவே ஜம்மு காஷ்மீர் போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். இது டாக்டர்கள் அடங்கிய தீவிரவாத நடவடிக்கைக்கானது என்பதையும் காஷ்மீர் போலீஸாருக்கு தெரிய வந்துள்ளது. எனவே, உமர், ஆதிலுடன் தொடர்புடையவர்களை போலீஸார் ரகசியமாக தேடி வந்துள்ளனர். டெலிகிராம் வலைதளத்தில் அவர்களுடைய தகவல் பரிமாற்றங்களை ‘டீகோடிங்’ செய்த பிறகே பரீதாபாத்தில் சோதனையை தொடங்கி உள்ளனர்.