

பாட்னா: மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) கட்சியின் தலைவருமான சிராக் பாஸ்வானிடம் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி அண்மையில் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மெகா கூட்டணிக்கு வருமாறு சிராக் பாஸ்வானுக்கு பிரியங்கா அழைப்பு விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக செய்தி நிறுவனத்துக்கு சிராக் பாஸ்வான் அளித்த பேட்டியில், "பிரியங்கா காந்தியிடம் இயல்பாக பேசுவேன். ஆனால் கூட்டணி தொடர்பாக அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை.
பிரதமர் நரேந்திர மோடியை நான் மிகவும் மதிக்கிறேன், நேசிக்கிறேன். தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலக மாட்டேன். பிஹார் தேர்தலுக்குப் பிறகு நிச்சயமாக அணி மாற மாட்டேன். பிரதமர் மோடி மீதான எனது மதிப்பும் அன்பும் என்றென்றும் நிலைத்திருக்கும்’’ என்றார்.