Published : 11 Aug 2018 05:38 PM
Last Updated : 11 Aug 2018 05:38 PM

பெண்களின் ‘நோ’-வை ‘யெஸ்’ ஆகப் புரிந்து கொள்ளாதீர்கள்: உ.பி. போலீஸாரின் விழிப்புணர்வுச் செய்திக்கு பலத்த வரவேற்பு

பெண்களின் ஒப்புதலைக் குறிக்கும் மீம் ஆகத் தொடங்கி கடைசியில் உ.பி.போலீஸார் அதனை புத்தி சாதுரியத்துடன் ஒரு விழிப்புணர்வு பிரச்சாரச் செய்தியாக மாற்றியது நெட்டிசன்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

அதாவது மறுப்பு ஆமோதிப்பல்ல என்பதுதான் செய்தி.

சமீபத்தில் உத்தரப் பிரதேச போலீஸ் துறை தங்கள் சமூகவலைத்தளத்தில் விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை வடிவமைத்தனர் அதில் பெண் என்பவர் ‘நோ’ என்று கூறினால் அதற்கு இரண்டு அர்த்தம் இல்லை என்பதை உணர்த்தினர்.

அதாவது ‘“Don’t fore fit your ‘yes’ in her ‘no’,” (அவர்களின் நோ-வில் உங்களது யெஸ்-ஐ முன் கூட்டியே பொருத்தி விட வேண்டாம்) என்பதே அந்த அபாரமான செய்தியாகும்.

உளப்பகுப்பாய்வு என்ற மானுட மனத்தின் வேர்களைக் கண்டலசும் ஆய்வுத்துறையின் தந்தை சிக்மண்ட் பிராய்ட் நோ- என்று மறுத்தால் அது உள்ளுக்குள் நனவலி தளத்தில் யெஸ் என்றும், வேண்டாம் என்றால் வேண்டும் என்றும் உள்ளர்த்தத்தை தனது மனநலம் பாதித்த நோயாளிகளை பேச்சு மூலம் சிகிச்சை அளிக்கும் முயற்சியில் கண்டடைந்தார். அது பொதுப்புத்திக்குள் நுழைந்து நோ என்றால் உள்ளுக்குள் யெஸ் என்று ரகசிய ஆசை கூறும் என்பதாகப் பதிவாகியுள்ளது. காரணம் பிராய்ட் ஆழ்மனத்தின் இச்சைகள் பற்றி அதன் வேர் வரை சென்று அலசியவர்.

இந்நிலையில் #ANoMeansNo என்ற ஹாஷ்டேக்கில் உ.பி. போலீஸ் பெண்களின் நோ-வை யெஸ் என்பதாக புரிந்து கொள்ள வேண்டாம், நோ என்றால் அது நோதான் என்று பிரச்சாரம் மூலம் அறிவுறுத்தி வருகின்றனர்.

இதற்கு நெட்டிசன்கள், பொதுமக்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்தச் செய்தி சிறியதாக இருந்தாலும் முக்கியச் செய்தி என்று நெட்டிசன்கள் வரவேற்றுள்ளனர்.

மற்றொரு நெட்டிசன் ‘எந்த ஒரு பெண்ணும் நோ என்றால் அது நோ-தான். ஆனால் ஆண்கள் ஏன் இதனைப் புரிந்து கொள்வதில்லை. அவர்கள் மனக்கோட்டை ஏன் கட்ட வேண்டும்? எனவே இது சரிதான் நோ என்றால் அது நோதான், யெஸ் அல்ல’ என்று ட்வீட் செய்துள்ளார்.

ஒரு சிலர் ANoMeansNo என்பது சக்தி வாய்ந்த செய்திதான், ஆனால் போலீஸுக்கும் அஞ்சாத சக்திவாய்ந்த நபர்களுக்கு இதனைப் புரிய வைப்பது கடினமாயிற்றே என்று பதிவிடுகின்றனர்.

மேலும் பலர் யெஸ் என்று ஆங்கிலத்தில் எழுதி அதனை நோ என்ற ஆங்கில எழுத்து போல் வடிவமைத்து இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x