

மும்பை: ‘வந்தே மாதரம்’ பாடல் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவுகூரும் வகையில், நேற்று நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் நடைபெற்றன.
மும்பையில் நடைபெற்ற வந்தே மாதம் பாடல் கொண்டாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுடன் இணைந்து பாட மகாராஷ்டிர மாநில சமாஜ்வாதிக் கட்சித் தலைவரும், மன்குர்த் சிவாஜி நகர் தொகுதி எம்எல்ஏவுமான அபு ஆஸ்மி மறுத்தார்.
முஸ்லிம்களின் கடவுளான அல்லா மீது நம்பிக்கை வைத்திருப்பவர்கள், தங்கள் தாயைக் கூட வணங்கத் தேவையில்லை.
இந்தப் பாடலை யாரும் கட்டாயப்படுத்தி பாட வைக்க முடியாது. வந்தே மாதரம் பாடலைப் பாட விரும்புகிறவர்கள் பாடட்டும். முஸ்லிம்கள் கூட இந்தப் பாடலைப் பாடுகின்றனர். ஆனால், அல்லாவை தொழுபவர்கள் வேறு யாரையும் வணங்கமாட்டார்கள் என்று அபு ஆஸ்மி தெரிவித்தார். அபு ஆஸ்மியின் இந்த பேச்சு சர்ச்சையை எழுப்பியுள்ளது.
இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதையடுத்து மும்பையிலுள்ள அபு ஆஸ்மின் வீட்டின் பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டு கண்டனக் குரல்களை எழுப்பினர். அபு ஆஸ்மியை பாஜக தலைவர்கள் தொடர்ந்து
கண்டித்து வருகின்றனர்.