

புதுடெல்லி: மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் டெல்லியில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:
தேர்தல் முறைகேடுகளை வெளிப்படுத்தும் ஏராளமான ஆதாரங்களை காங்கிரஸ் கட்சி திரட்டியுள்ளது. இந்தப் பணியை நாங்கள் தொடர்வோம். வாக்கு திருட்டு நடவடிக்கையில் பாஜக ஈடுபட்டுள்ளது, வாக்கு திருட்டு மூலம் பிரதமர் ஆனார் மோடி என்பதை நாங்கள் மக்களுக்கு தெரிவிப்போம். தேர்தல் மோசடி எங்கோ ஓர் இடத்தில் நடப்பதில்லை. இது திட்டமிட்டு நடத்தப்படுகிறது.
இதேபோன்ற முறைகேடுகள்தான் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ஹரியானா மற்றும் குஜராத்தில் நடைபெற்றன. பிஹாரிலும் இதைத்தான் செய்யப்போகிறார்கள். அரசியல் சாசனம், மக்களின் வாக்குகளை காப்பதற்காக, காங்கிரஸ் கட்சி தொடர்ந்து இப்பிரச்சினையை எழுப்பும். இவ்வாறு ராகுல் கூறினார்.