

புனே: புனேவைச் சேர்ந்த வழக்கறிஞர் உர்மி. இவர் தனது சமூக வலைதளபக்கத்தில் பிஹார் முதல்கட்ட தேர்தலில் மோடிக்கு வாக்களித்து விட்டதாக கூறி விரலில் அடையாள மையுடன் புகைப்படம் ஒன்றை வெளியிட்டார்.
இவர் முன்னர் புனேவில் நடைபெற்ற தேர்தலிலும் இதேபோன்று ஓட்டளித்துவிட்டு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை காங்கிரஸ் கட்சியினர் தோண்டி எடுத்து ஒரு நபர் இரண்டு மாநிலங்களில் வாக்களிக்கலாம் என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம் என்று தெரிவித்துள்ளனர்.
இரட்டை மாநிலங்களில் வாக்களித்தாக புகார் தீவிரமடைந்ததை தொடர்ந்து வழக்கறிஞர் உர்மி கூறுகையில், “பிஹார் மாநில வாக்காளர்களை உற்சாகப்படுத்தி தேர்தலில் வாக்கு செலுத்த வைக்க வேண்டும் என்ற நோக்கத்துக்காகவே அந்த பதிவை வெளியிட்டேன். பிஹார் தேர்தலில் நான் ஒருபோதும் வாக்களிக்கவில்லை" என்று தெரிவித்துள்ளார்.