

லஞ்சம், ஊழல், முறைகேடுகள் தொடர்பாக துப்பு கொடுப்போர் பாதுகாப்பு சட்டம் 2011-ல் திருத்தம் கொண்டுவரப்படும் என்று பணியாளர் நலன், பொது மக்கள் குறை தீர்ப்புத் துறை இணையமைச்சர் ஜீதேந்திரசிங் மாநிலங்களவையில் வியாழக்கிழமை தெரிவித்தார். துப்புக்கொடுப்போரின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் இந்த சட்டத் திருத்தம் கொண்டு வரப்படுகிறது.