

குவாஹாட்டி: பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி, அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் அசாம் மாநிலத்துக்கு வர உள்ளதாக முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா எக்ஸ் சமூக வலைதளத்தில் நேற்று வெளியி்ட்ட பதிவில், “பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் வரும் நாட்களில் அசாம் மாநிலத்துக்கு வருகை தர உள்ளனர்.
இந்த திட்டங்கள் மாநிலத்தின் வளர்ச்சியை புதிய உச்சத்துக்கு கொண்டு செல்லும். இதன் மூலம் புதிய இந்தியாவில் அசாமின் அந்தஸ்து பிரதிபலிக்கும்” என கூறியுள்ளார்.