

புர்னியா: பிஹார் தேர்தலில் வாக்குகளை திருட பாஜக முயற்சிக்கும் என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.
பிஹாரில் 2-ம் கட்ட தேர்தல் நடைபெறவுள்ள புர்னியா நகரில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசும்போது, “நாட்டில் எங்கு தேர்தல் நடந்தாலும், வாக்குகளை திருடி பாஜக வெற்றி பெற்று வருகிறது. அந்த வகையில் ஹரியானாவில் நடந்த தேர்தலில் பாஜகவும் தேர்தல் ஆணையமும் இணைந்து வாக்குகளை எப்படி திருடின என்பது குறித்து இந்த உலகத்துக்கு விரிவாக எடுத்துரைத்தேன்.
இதுபோல பிஹார் தேர்தலிலும் பாஜக வாக்குகளை திருட முயற்சிக்கும். இதைத் தடுத்து நிறுத்தி அரசியல் சாசனத்தை பாதுகாக்க வேண்டியது இளைஞர்களின் பொறுப்பு. தேர்தலின் போது வாக்குப் பதிவு மையங்களில் இருக்கும் முகவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்” என்றார்.