

திருமலை: ஒருங்கிணைந்த ஆந்திராவில் மறைந்த ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி முதல்வராக இருந்தபோது, அவரது அமைச்சரவையில் நீர்வளத்துறை அமைச்சராக பணியாற்றியவர் பொன்னால லட்சுமைய்யா (81).
தெலங்கானா மாநிலம் பிரிந்த பின்னர், காங்கிரஸில் இருந்து பிரிந்து இவர் பிஆர்எஸ் கட்சியில் இணைந்தார். இந்நிலையில், தனது குடும்பத்தாருடன் திருப்பதிக்கு வந்த இவர், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில், ஏழுமலையான் கோயில் மற்றும் காளஹஸ்தி சிவன் கோயில்களில் தரிசனம் செய்தார். அப்போது, தான் எழுதிய 86 அணைகளின் ஜல யக்ஞம் எனும் புத்தகத்தை அவர் கோயில்களில் வைத்து வழிபட்டார்.
அமைச்சராக இருந்தபோது 86 அணைகள் கட்டியதை, ஒரு சாதனையாக அந்த புத்தகத்தில் கூறியுள்ளார். தற்போதைய ஆந்திரா - தெலங்கானா மாநிலங்களில் உள்ள நீர்வளம், நதிநீர் இணைப்பு, நதி நீர் பிரச்சினைக்கான தீர்வு ஆகியவை குறித்து புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.