

பாட்னா: மத்திய அமைச்சர் அமித் ஷா செய்தியாளர்களுக்கு நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:
பிஹார் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அலைதான் வீசுகிறது. மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 160 முதல் 180 இடங்களை கைப்பற்றும். பிரதமர் மோடி ஏன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேட்கிறார்? பிரதமர் ஏன் பிரச்சாரத்தில் ஈடுபடக்கூடாது என்று நான் கேட்கிறேன்?
ஜனநாயகத்தின் கொண்டாட்டம்தான் தேர்தல். மக்களுடன் தொடர்பில் இருப்பது ஒவ்வொரு அரசியல் கட்சிகளின் பொறுப்பாகும். எதிர்க்கட்சிகள் ஒவ்வொரு முறையும் பிரதமர் மோடி, அவரது தாயாரை இழிவுபடுத்தும்போதும் நாட்டு மக்கள் தாமரையை மலரச் செய்துள்ளனர். இந்த முறையும் அப்படியே நடக்கும்.
மெகா கூட்டணியால் நல்லாட்சியைத் தர முடியாது. நல்லாட்சி வேண்டுமா அல்லது காட்டாட்சி வேண்டுமா என்பதை பிஹார் மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.