ஆர்ஜேடி தேர்தல் சுவரொட்டிகளில் லாலுவின் படத்தை ஏன் காணவில்லை? - தேஜஸ்விக்கு பிரதமர் மோடி சூசகமான கேள்வி

பிஹார் சட்டப்பேரவைக்கான முதல்கட்டத் தேர்தல் வரும் 6-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிலையில் அரசியல் கட்சிகள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. கதிஹாரில் என்டிஏ கூட்டணி சார்பில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு மாலை அணிவித்து கவுரவித்த பாஜகவினர்.படம்: பிடிஐ

Updated on
1 min read

புதுடெல்லி: பிஹாரின் தேர்​தல் பிரச்​சார சுவரொட்​டிகளில் இந்த மாநிலத்​தில் காட்​டாட்​சிக்கு காரண​மானவரின் (லாலு பிர​சாத்) படங்​களை ஏன் பயன்​படுத்​த​வில்லை என்று பிரதமர் மோடி மறை​முக​மாக ஆர்​ஜேடி தலை​வர் தேஜஸ்வி யாதவுக்கு கேள்வி எழுப்பி உள்​ளார்.

கதி​ஹாரில் நடை​பெற்ற பிரச்​சார கூட்​டத்​தில் பிரதமர் மோடி இதுகுறித்து பேசி​ய​தாவது: பிஹாரில் ஒட்​டப்​பட்​டுள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்​ஜேடி) மற்​றும் காங்​கிரஸ் கட்​சிகளின் சுவரொட்​டிகளில், பிஹாரில் கட்​டாட்​சியை கொண்டு வந்த நபரின் படங்​கள்(லாலு பிர​சாத்) முற்​றி​லு​மாக காண​வில்​லை. ஒரு சில இடங்​களில் தொலைநோக்​கி​யில் கூட காண​முடி​யாத அளவுக்கு மிகச் சிறிய​தாக உள்​ளன.

ராஷ்டிரிய ஜனதா தளத்​தின் மிகப்​பெரிய தலை​வ​ராக இருக்​கும் அவரது முழு குடும்​ப​மும் அரசி​யலில் ஈடு​பட்​டுள்​ளது. பின்​னர் ஏன் அவரதுபடத்தை பயன்​படுத்​த​வில்​லை. லாலு பிர​சாத் யாத​வின் மகன் தேஜஸ்வி தனது சொந்த தந்​தை​யின் பெயரை குறிப்​பிட ஏன் தயங்​கு​கிறார். உங்​களின் தந்​தை​யின் பெயரைச் சொல்ல நீங்​கள் ஏன் வெட்​கப்​படு​கிறீர்​கள்?

பிஹார் இளைஞர்​களிட​மிருந்து ஆர்​ஜேடி மறைக்க வேண்​டிய கட்​டா​யத்​தில் இருக்​கும் தவறு என்ன என்று ஆர்​ஜேடி தலை​மையி​லான எதிர்க்​கட்​சி​யின் மகா கூட்​டணி முதல்​வர்வேட்​பாள​ராக களத்​தில் இருக் கும் தேஜஸ்வி விளக்​க வேண்​டும். இவ்​வாறு பிரதமர்​ மோடி பேசி​னார்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in