

ஹைதராபாத்: தெலங்கானா மாநில அமைச்சராக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது அசாருதீன் நேற்று பதவி பிரமாணம் செய்து கொண்டார்.
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரான முகமது அசாருதீன் ஹைதராபாத் ஆளுநர் மாளிகையில் நேற்று காலை அமைச்சராக பதவி பிரமாணம் செய்து கொண்டார்.
அவருக்கு தெலங்கானா மாநில ஆளுநர் ஜிஷ்னுதேவ் வர்மா பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். மிகவும் எளிமையான முறையில் நடைபெற்ற இந்த விழாவில் தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர். அதன் பின்னர் அமைச்சர் அசாருதீன் செய்தியாளர்களிடம் அசாருதீன் கூறியதாவது:
அமைச்சர் பதவி அளித்த தற்காக காங்கிரஸ் கட்சியின் மேலிடத்திற்கும், முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கும் எனது நன்றியினை தெரிவித்து கொள்கிறேன். என் மீது பாஜக, பிஆர்எஸ் கட்சிகள் வீண் பழியை சுமத்துகின்றன. என் மீது உள்ள எவ்வழக்குகளிலும் குற்றம் நிரூபனம் ஆகவில்லை. இவ்வாறு அசாருதீன் கூறினார்.