சத்தீஸ்கர் மதுபான முறைகேடு: அமலாக்கத் துறைக்கு உத்தரவு

சத்தீஸ்கர் மதுபான முறைகேடு: அமலாக்கத் துறைக்கு உத்தரவு
Updated on
1 min read

புதுடெல்லி: சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியின்போது ரூ.2 ஆயிரம் கோடி மதுபான முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது.

இந்த வழக்கில் அப்போதைய முதல்வர் பூபேஷ் பகேலின் மகன் சைதன்யா கைது செய்யப்பட்டார். இதை எதிர்த்து சைதன்யா பகேல் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த், ஜோய்மால்யா பக்சி அமர்வு விசாரித்தது.

சைதன்யா பகேல் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் என்.ஹரிகரன், கபில் சிபல் ஆஜராகி, விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்ற காரணத்தின் அடிப்படையில் மனுதாரரை அமலாக்கத் துறை கைது செய்துள்ளது என வாதிட்டனர். இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், சைதன்யா பகேலின் மேல்முறையீட்டு மனுவுக்கு பதில் அளிக்குமாறு அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்டு விசார ணையை தள்ளி வைத்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in