சர்தார் படேலின் 150-வது பிறந்த தினம்: பிரதமர் நரேந்திர மோடி புகழாரம்

சர்தார் படேலின் 150-வது பிறந்த தினம்: பிரதமர் நரேந்திர மோடி புகழாரம்
Updated on
1 min read

புதுடெல்லி: நாட்​டின் முதல் துணைப் பிரதமர் சர்​தார் வல்​லப​பாய் படேல் பிறந்த தின​மான அக்​டோபர் 31-ம் தேதி கடந்த 2014-ம் ஆண்டு முதல் தேசிய ஒற்​றுமை தின​மாக கொண்​டாப்​படு​கிறது.

படேலின் 150-வது பிறந்த தினத்தை முன்​னிட்​டு, குஜ​ராத்​தின் கெவாடியா நகரில் அமைந்​துள்ள படேலின் பிரம்​மாண்ட சிலைக்கு பிரதமர் மோடி நேற்று காலை மலரஞ்​சலி செலுத்தி வழிபட்​டார். அதன்​பின் அவர் ஒற்​றுமை உறு​தி​மொழி எடுத்​தார். இந்​நிகழ்ச்​சியை முன்​னிட்டு அங்கு தேசிய ஒற்​றுமை தின அணிவகுப்​புக்​கும் ஏற்​பாடு செய்​யப்​பட்​டிருந்​தது.

இதில் பாது​காப்பு படை​யினர் மற்​றும் கலைக் குழு​வினர் கலந்து கொண்டு பல்​வேறு நிகழ்ச்​சிகளை நடத்​தினர். இதை பிரதமர் மோடி பார்​வை​யிட்​டார். இந்​நிகழ்ச்​சி​யில் பிரதமர் மோடி பேசி​ய​தாவது:

சுதந்​திரத்​துக்கு பிறகு, நாட்​டில் உள்ள 550-க்​கும் மேற்​பட்ட சமஸ்​தானங்​களை சர்​தார் படேல் ஒன்​றிணைத்​தார். இது யாராலும் செய்ய முடி​யாத பணி. அவருக்கு ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற தொலைநோக்கு முக்​கிய​மானது. முழு காஷ்மீரை​யும் இந்​தி​யா​வுடன் இணைக்க படேல் விரும்​பி​னார். இந்த விஷ​யத்​தில் காங்​கிரஸ் தவறான நடவடிக்​கைகளை எடுத்​தது. அதனால் காஷ்மீரை ஒன்​றிணைக்க முடிய​வில்​லை. இறை​யாண்மை என்​பது அனைத்​தை​யும் விட மேலானது.

வரலாற்றை எழுதி நேரத்தை வீணடிக்க கூடாது, வரலாற்றை உரு​வாக்க வேண்​டும் என்​ப​தில் சர்​தார் படேல் உறு​தி​யுடன் இருந்​தார். இந்​தி​யாவை ஒன்​றிணைத்து அவர் வரலாறு படைத்​தார். நாட்​டின் ஒற்​றுமைக்கு பின்​னால் அவர் உந்து சக்​தி​யாக இருந்​தார். அதனால்​தான் நாட்​டின் தலை​விதி மாறியது. நாட்​டின் ஒற்​றுமை, சிறந்த நிர்​வாகம், பொது சேவை ஆகிய​வற்​றில் அவர் உறு​தி​யுடன் இருந்​தது பல தலை​முறை​களை தொடர்ந்து ஊக்​குவிக்​கிறது.

ஒருங்​கிணைந்த, வலிமை​யான மற்​றும் தற்​சார்பு இந்​தியா என்ற அவரது தொலைநோக்கை நிறைவேற்​று​வ​தில் நா​மும் உறு​தி​யுடன் இருக்​கிறோம்​. இவ்​வாறு பிரதமர்​ மோடி கூறி​னார்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in