Published : 29 Aug 2018 07:44 AM
Last Updated : 29 Aug 2018 07:44 AM

கிகி சேலஞ்சைத் தொடர்ந்து இணையத்தைக் கலக்கும் ‘மேரி பாப்பின்ஸ்’

சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய கிகி சவாலின் தொடர்ச்சி யாக, தற்போது மிகவும் ஆபத்து நிறைந்த ‘மேரி பாப்பின்ஸ்’ என்ற சவால் இளைஞர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளது.

பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டா கிராம் போன்ற சமூக வலைதளங் கள், இன்றைய இளைஞர்களின் வாழ்வியலுடன் இரண்டறக் கலந்து விட்ட ஒன்றாக மாறிவிட்டன. வீடியோக்கள், மீம்ஸ்கள் போன்ற வற்றுடன் வலம் வந்துக்கொண் டிருந்த சமூக வலைதளங்கள், தற் போது பல்வேறு சவால் விளை யாட்டுகளுடன் (சேலஞ்ச் கேம்) உலா வருகின்றன. எந்த நேரத்தில் எந்த சவால் வைரலாக மாறும் என் பதை யாராலும் கணிக்க முடிய வில்லை. அந்த வகையில், கடந்த சில மாதங்களாக சமூக வலைதளங் களில் ‘கிகி’ என்ற சவால், வேகமாக பரவி வந்தது. ஓடிக்கொண்டிருக் கும் காரில் இருந்து இறங்கி, அதனுடனே சென்று நடனமாடுவதே கிகி சவால். மேற்கத்திய நாடுகளில் தொடங்கி, பின்னர் இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் இந்த சவால் வேகமாக பரவியது. சிறுவர்கள், பெரியவர்கள் என்ற வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரும் இந்த கிகி சவாலில் பங்கேற்று தனது ‘சாகச’ வீடியோக்க ளை பதிவேற்றம் செய்தனர். பொழுதுபோக்காக இருந்தபோதி லும், இந்த சவாலில் ஈடுபட்ட பலர் விபத்தில் சிக்கி படுகாயமுற்றனர். இதனைத் தொடர்ந்து, இந்த கிகி சவாலுக்கு பல்வேறு நாடுகளில் தடைவிதிக்கப்பட்டது.

இந்த சூழ்நிலையில், தற்போது ‘மேரி பாப்பின்ஸ்’ என்ற சவால் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கையில் குடையுடன் (பாராசூட்டாக கருதி) ஏதேனும் உயரமான இடத்திலிருந்து குதிக்க வேண்டும். இதுதான் மேரி பாப்பின்ஸ் சவால். இந்த சவாலை ஏற்று பல இளைஞர்கள் தற்போது குடையுடன் பாலம், வீட்டின் மாடி, மரம் போன்ற இடங்களில் இருந்து குதித்து வருகின்றனர். இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த சவாலில் ஈடுபடும் பலருக்கு கை, கால்கள் உடைந்து வருவதாகவும், பலர் ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியான வண்ணம் இருக்கின் றன. எனினும், இந்த சவாலை விட பலருக்கு மனம் வரவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x