மேற்கு வங்க வாக்காளர் பட்டியல் திருத்த பணிக்காக உதவி எண்களை அறிவித்தது தேர்தல் ஆணையம்

மேற்கு வங்க வாக்காளர் பட்டியல் திருத்த பணிக்காக உதவி எண்களை அறிவித்தது தேர்தல் ஆணையம்
Updated on
1 min read

கொல்கத்தா: தமிழகம், மேற்​கு​வங்​கம் உட்பட 12 மாநிலங்​களில் வாக்​காளர் பட்​டியல் திருத்​தப் பணி தொடங்கி உள்​ளது.

மேற்​கு​ வங்​கத்​தில் ஆட்சி நடத்​தும் திரிண​மூல் காங்​கிரஸ் அரசு, வாக்​காளர் பட்​டியல் திருத்​தப் பணிக்கு ஆரம்​பம் முதலே எதிர்ப்பு தெரி​வித்து வரு​கிறது. இந்த சூழலில் தேர்​தல் ஆணை​யம் சார்​பில் 1950 என்ற உதவி எண் அறிவிக்​கப்​பட்டு உள்​ளது. இந்த எண்​ணில் மேற்கு வங்க வாக்காளர் திருத்​தப் பணி தொடர்​பான கோரிக்கை, புகார்​களை​யும் பதிவு செய்​ய​லாம். புகார்​கள் மீது உடனுக்​குடன் நடவடிக்கை எடுக்​கப்​படும்.

தேர்​தல் ஆணை​யம் சார்​பில் தேசிய அளவில் 1800 - 11 - 1950 என்ற என்ற கட்​ட​ணமில்லா தொலைபேசி எண் பயன்​பாட்​டில் உள்​ளது. இந்த எண்​ணிலும் புகார்​களை பதிவு செய்​ய​லாம். complaints@eci.gov.in என்ற இ-மெ​யில் முகவரிக்​கும் புகார்​களை அனுப்​பலாம். மேலும் தேர்​தல் அலு​வலர்​கள், அலு​வல​கங்​களில் நேரடி​யாக​வும் புகார் மனுக்​களை அளிக்​கலாம் என்று மாநில தேர்​தல் ஆணை​ய அதி​காரி​கள்​ தெரி​வித்​துள்​ளனர்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in