வாராணசியில் எச்சில் துப்பினால் ரூ.250 அபராதம்

வாராணசியில் எச்சில் துப்பினால் ரூ.250 அபராதம்
Updated on
1 min read

வாராணசி: உத்தர பிரதேச மாநிலம் வாராணசி நகராட்சியின் பொதுமக்கள் தொடர்பு அதிகாரி சந்தீப் ஸ்ரீவாஸ்தவா கூறியதாவது:

உத்தர பிரதேச திடக்கழிவு மேலாண்மை மற்றும் சுகாதார விதிகள் (2021) வாராணசியில் அமலுக்கு வந்துள்ளது. இதன்படி, பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.250, வாகனங்களில் இருந்தபடி குப்பையை வீசினாலோ எச்சில் துப்பினாலோ ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும். இதுபோல சாலையில் சுற்றித் திரியும் பிராணிகளுக்கு உணவுப் பொருள் வழங்கினால் ரூ.250, பூங்கா, சாலை உள்ளிட்ட பொது இடங்களில் குப்பை கொட்டினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும்.

நீர்நிலைகளில் குப்பைகளை கொட்டினால் ரூ.750, குப்பைகளை மூடப்படாத லாரிகளில் எடுத்துச் சென்றால் ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in