மும்பையில் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்ட 20+ சிறுவர்கள் மீட்பு - ஒருவர் கைது

மும்பையில் உள்ள ஆர்.ஏ. ஸ்டுடியோ
மும்பையில் உள்ள ஆர்.ஏ. ஸ்டுடியோ
Updated on
1 min read

மும்பை: மும்பையில் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்ட 20-க்கும் மேற்பட்ட சிறுவர் - சிறுமிகளை போலீஸாரும் தீயணபை்புத் துறையினரும் பத்திரமாக மீட்டனர்.

மும்பையில் பொவாய் என்ற பகுதியில் உள்ள ஆர்.ஏ.ஸ்டுடியோ என்ற ஒரு ஸ்டுடியோவில் 20-க்கும் மேற்பட்ட சிறுவர் - சிறுமிகளை ஒருவர் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்து, வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் அவர், தான் சிலரிடம் பேச விரும்புவதாகவும் அவர்களிடம் சில கேள்விகளைக் கேட்க விரும்புவதாகவும் தனக்கு பணம் தேவையில்லை என்றும் கூறி இருந்தார். மேலும், அது நடக்காவிட்டால் ஸ்டுடியோவை தீ வைத்து கொளுத்திவிடப் போவதாகவும் அவர் மிரட்டல் விடுத்திருந்தார்.

இதையடுத்து, போலீஸாரும் தீயணைப்புத் துறையினரும் அங்கு விரைந்து, சிறுவர் சிறுமிகளை பத்திராக மீட்டனர். மேலும், மிரட்டல் விடுத்த ரோஹித் ஆர்யா என்ற அந்த நபரை போலீஸார் கைது செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போலீசார், “20க்கும் மேற்பட்ட சிறுவர் - சிறுமியர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். அனைவரும் அவர்களின் பெற்றோர் வசம் ஒப்படைக்கப்பட்டனர். மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மனநிலை சரியில்லாதவர் போலத் தெரிகிறது. அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆடிஷனுக்காக அவர் குழந்தைகளை அழைத்துள்ளது தெரிய வந்துள்ளது.” என தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in