சர்வதேச அமைதிக்கு வலுவான இந்தியா - ஜப்பான் உறவு அவசியம்: பிரதமர் மோடி

பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் சனே தகைச்சி.
பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் சனே தகைச்சி.
Updated on
1 min read

புதுடெல்லி: சர்வதேச அமைதிக்கும், ஸ்திரத்தன்மைக்கும், வளத்துக்கும் இந்தியா - ஜப்பான் உறவு வலுவாக இருப்பது அவசியம் என்று புதிதாக பதவியேற்றுள்ள ஜப்பான் பிரதமர் சனே தகைச்சியிடம் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஜப்பான் நாட்டின் புதிய பிரதமராகவும், அந்நாட்டு அரசியல் வரலாற்றில் முதல் பெண் பிரதமராகவும் அண்மையில் சனே தகைச்சி பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஏற்கெனவே எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார் பிரதமர் மோடி.

இந்நிலையில், புதிய பிரதமர் சனே தகைச்சியுடன், மோடி தொலைபேசியில் பேசினார். அது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள பிரதமர் மோடி, “ஜப்பான் நாட்டின் புதிய பிரதமர் சனே தகைச்சியுடன் தொலைபேசியில் உரையாடினேன். அவர் பிரதமர் பதவி ஏற்றதற்கு வாழ்த்து தெரிவித்ததோடு, இந்தியா - ஜப்பான் உறவை மேம்படுத்துவது குறித்த சிந்தனைகளை நாங்கள் பகிர்ந்து கொண்டோம்.

இருநாடுகளின் பொருளாதார பாதுகாப்பு, ராணுவ ஒத்துழைப்பு, அறிவுசார் பங்களிப்பு குறித்து ஆலோசித்தோம். இருவருமே, உலக அமைதி, ஸ்திரத்தன்மை, மற்றும் வளத்தை உறுதி செய்வதில் இந்தியா - ஜப்பானின் வலுவான உறவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதில் உடன்பட்டோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

முதல் பெண் பிரதமர்: ஜப்​பான் நாட்​டில் லிபரல் ஜனநாயகக் கட்சி (எல்​டிபி) ஆட்​சி​யில் உள்​ளது. இக்​கட்​சி​யின் தலை​வர் மற்​றும் ஜப்​பான் பிரதமர் ஷிகெரு இஷி​பா, ஓராண்​டுக்​குப் பிறகு பதவி வில​கு​வ​தாக ஏற்​கெனவே அறி​வித்​திருந்​தார். இதற்​கிடை​யில், ஜப்​பான் நாடாளு​மன்​றத்​தின் இரு அவை​களி​லும் லிபரல் ஜனநாயகக் கட்சி பெரும்​பான்மை இழந்​தது. இதனால் பிரதமர் பதவியை ஷிகெரு கடந்த மாதம் ராஜி​னாமா செய்​தார்.

அதனால், ஆளும் லிபரல் டெமாக்​ரடிக் கட்​சி​யின் புதிய தலை​வரை தேர்ந்​தெடுப்​ப​தற்​கான தேர்​தல் டோக்​கியோ​வில் நடை​பெற்​றது. இதில் முன்​னாள் பொருளா​தார பாது​காப்பு அமைச்​சர் சனே டகைச்சி (64), வேளாண் அமைச்​சர் ஷிஞ்​சிரோ கொய்​சுமி ஆகியோர் போட்​டி​யிட்​டனர். முதல் கட்​ட​மாக கட்​சிக்​குள் நடை​பெற்ற வாக்​கெடுப்​பில் சனே டகைச்சி வெற்றி பெற்​றார். தொடர்ந்து நாடாளு​மன்​றத்​தில் டகைச்சி பெரும்​பான்​மையை நிரூபித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in