

வயிற்று வலி காரணமாக டெல்லியின் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உடல் நலமடைந்ததையடுத்து வியாழக்கிழமை மாலை வீடு திரும்பினார்.
கடந்த புதன்கிழமை திடீரென வாந்தி, வயிற்றுவலியால் அவதிப்பட்ட ராஜ்நாத் சிங், இரவு 8.30 மணிக்கு டெல்லியின் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ராஜ்நாத் சிங்குக்கு டாக்டர் சுப்ரத் ஆச்சார்யா சிகிச்சை அளித்தார். அவரை வியாழக்கிழமை மருத்துவமனையில் ஓய்வு எடுக்கும்படி டாக்டர்கள் அறிவுறுத்தினர்.
இதனால், வியாழக்கிழமை நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரின் கடைசி கூட்டத்திற்கு அவரால் செல்ல முடியவில்லை. வியாழக்கிழமை மாலை உடல் நலமடைந்ததையடுத்து ராஜ்நாத் சிங் வீடு திரும்பினார்.