

புதுடெல்லி: நக்சல் அமைப்பின் மத்திய குழுவில் உறுப்பினர்களாக இருந்த தலைவர்கள் ரூபேஷ், பூபதி என்ற சோனு ஆகியோர் உட்பட பலர் சமீபத்தில் போலீஸார் முன் ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு சரணடைந்தனர்.
இதனால் இவர்கள் மீது மாவோயிஸ்ட் மத்திய குழு துரோகி முத்திரை குத்தியது. இது குறித்து ரூபேஷ் அளித்த பேட்டியில் கூறியதாவது:
பாதுகாப்பு படையினருக்கு எதிரான தாக்குதலை நிறுத்திவிட்டு, மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து ஆராய வேண்டும் என நக்சலைட் உறுப்பினர்களுக்கு மறைந்த பொதுச் செயலாளர் பசவராஜ் அழைப்பு விடுத்தார்.
இது தொடர்பாக ஆலோசிக்க அரசிடம் நேரம் கோரப்பட்டது. ஆனால், இத்திட்டம் பலனளிக்கும் முன்பே, என்கவுன்ட்டரில் பசவராஜ் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆனால், நக்சலைட்டுகளின் எதிர்காலத்துக்கு ஆயுதங்களை கீழேபோட்டுவிட்டு மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதுதான் சிறந்தது என அவர் கூறி வந்தார். அதனால் சரணடைந்தோம். இவ்வாறு ரூபேஷ் கூறினார்.