டிமேட் கணக்கில் டிஜிட்டல் மாயம்: ம.பி.யில் சில நிமிடங்கள் மட்டும் கோடீஸ்வரராக இருந்த வழக்கறிஞர்

டிமேட் கணக்கில் டிஜிட்டல் மாயம்: ம.பி.யில் சில நிமிடங்கள் மட்டும் கோடீஸ்வரராக இருந்த வழக்கறிஞர்
Updated on
1 min read

போபால்: டிஜிட்டல் மாயம் காரணமாக மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் சில நிமிடங்கள் மட்டும் கோடீஸ்வரராக திகழ்ந்தார்.

மத்தியப் பிரதேசம் தர் மாவட்டம் தாம்நாத் நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் வினோத் டாங்ளே. தனியார் பள்ளி ஒன்றையும் நடத்தி வருகிறார். இவர் சமீபத்தில் தொடங்கிய டி-மேட் கணக்கில் சில நாட்களுக்கு முன்பு ‘ஹர்சில் அக்ரோ லிமிடெட்’ என்ற நிறுவனத்தின் 1,312 பங்குகள் வரவு வைக்கப்பட்டன.

டிஜிட்டல் மாயம் காரணமாக தவறாக கணக்கிடப்பட்டு வந்த இந்த பங்குகளின் மொத்த மதிப்பை பார்த்தபோது வினோத் டாங்ளேவுக்கு மிகுந்த ஆச்சர்யம். ஒரு பங்கின் விலை 2.14 கோடி எனவும், மொத்த பங்கின் மதிப்பு ரூ.2,817 கோடியே 41 லட்சத்து 29 ஆயிரத்து 408 என காட்டியது.

உலகிலுள்ள அனைத்து லாட்டரியும் அவருக்கே விழுந்தது போல், ஒரேநாள் இரவில் தனது தலைவிதி மாறிவிட்டது என நினைத்தார் வினோத். தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஏற்பட்ட தவறு சில நிமிடங்களில் சரியாகி ஹர்சில் அக்ரோ பங்குகள் திரும்பப் பெறபட்டன. டிஜிட்டல் மாயத்தால் சில நிமிடங்கள் கோடீஸ்வரராக இருந்ததை தனது நண்பர்களுடன் பகிர்ந்து சிரித்தார் வினோத் டாங்ளே.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in