

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலங்களவை எம்பி பதவிக்கான தேர்தலில் ஆளும் தேசிய மாநாடு கட்சியை சேர்ந்த 3 வேட்பாளர்கள், பாஜகவை சேர்ந்த ஒரு வேட்பாளர் வெற்றி பெற்றனர்.
ஜம்மு காஷ்மீரில் மொத்தம் 4 மாநிலங்களவை எம்பி பதவிகள் உள்ளன. கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரியில் 4 எம்பிக்களின் பதவிக் காலம் நிறைவடைந்தது.
இதைத் தொடர்ந்து 4 மாநிலங்களவை எம்பி பதவிக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. தேசிய மாநாடு கட்சியை சேர்ந்த சவுத்ரி முகமது ரம்ஜான், சாஜித் கிட்ச்லூ, குர்விந்தர் சிங் ஆகியோரும் பாஜகவை சேர்ந்த சத் சர்மாவும் வெற்றி பெற்றனர்.