கோவாவில் ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலில் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி: கடற்படை வீரர்களுடன் இரவு விருந்தில் பங்கேற்றார்

கோவாவில் ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலில் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி: கடற்படை வீரர்களுடன் இரவு விருந்தில் பங்கேற்றார்
Updated on
1 min read

புதுடெல்லி: ஐஎன்​எஸ் விக்​ராந்த் போர்க்​கப்​பலில் கடற்​படை வீரர்​கள், அதி​காரி​களு​டன் பிரதமர் மோடி தீபாவளி கொண்​டாடி​னார். அன்று நடை​பெற்ற இரவு விருந்​தில் அவர் பங்​கேற்றார்.

தீபாவளி பண்​டிகை​யைக் கொண்​டாடு​வதற்​காக கோவா மற்​றும் கர்​நாட​கா​வின் கார்​வார் கடற்​கரை​யில் இந்​திய கடற்​படை​யின் முக்​கிய விமானம் தாங்கி போர்க்​கப்​பலான ஐஎன்​எஸ் விக்​ராந்த் நிறுத்தி வைக்​கப்​பட்​டிருந்​தது. இந்த கப்​பலுக்கு பிரதமர் நரேந்​திர மோடி ஞாயிற்​றுக்​கிழமை மாலை வந்​தார்.

விமானம் தாங்கி கப்​பலில் இருந்து போர் விமானங்​கள் புறப்​படு​வதை​யும், தரை இறங்​கு​வதை​யும் ஆர்​வத்​துடன் அவர் பார்த்து வியந்​தார். போர்க் கப்​பலிலேயே அன்று இரவு தங்​கிய மோடி, நேற்று முன்​தினம் கடற்​படை வீரர்​களு​டன் தீபாவளியை கொண்​டாடி​னார். கடற்​படை அதி​காரி​கள் மற்​றும் வீரர்​களுக்கு இனிப்​பு​களை பிரதமர் மோடி ஊட்டி மகிழ்ந்​தார். பின்​னர் வீரர்​கள் மத்​தி​யில் அவர் பேசி​ய​தாவது:

இன்று ஓர் அற்​புத​மான நாள். ஒரு பக்​கத்​தில் கடல் உள்​ளது. மறு​பக்​கத்​தில், நம் இந்​திய தாயின் துணிச்​சலான வீரர்​களின் பலம் உள்​ளது. ஒரு பக்​கம் எல்​லை​யற்ற எல்​லைகள் உள்​ளன. மறு​பக்​கம், எல்​லை​யற்ற சக்​தி​களை உள்​ளடக்​கிய மாபெரும் ஐஎன்​எஸ் விக்​ராந்த் உள்​ளது.

சூரிய கதிர்​களால் கடல் நீரில் ஏற்​படும் பிர​காசம், நம் துணிச்​சலான வீரர்​களால் ஏற்றி வைக்​கப்​படும் தீபாவளி விளக்​கு​களால் ஏற்​பட்​டுள்​ளது. இந்த முறை, கடற்​படை​யின் துணிச்​சலான வீரர்​கள் மத்​தி​யில் தீபாவளி கொண்​டாடு​வதை அதிர்​ஷ்ட​மாக உணர்​கிறேன்.

ஐஎன்​எஸ் விக்​ராந்​தில் முந்​தைய இரவை நான் கழித்த நினை​வு​களை விவரிக்க கடின​மாக உள்​ளது. அபரிமித​மான ஆற்​றலுட​னும், உற்​சாகத்​துட​னும் வீரர்​கள் இருப்​பதை கண்​டேன். இந்த பெரிய கப்​பல், காற்றை விட வேக​மாக சீறிப்​பா​யும் விமானங்​கள், நீர்​மூழ்கி கப்​பல்​கள் ஆகியவை ஆச்​சரிய​மாக தெரி​கின்​றன.

உங்​களிடம் இருந்து கடின உழைப்​பு, தவம், அர்ப்​பணிப்பு ஆகிய​வற்றை நான் கற்​றுக் கொண்​டேன். இந்த வாழ்க்​கையை வாழ்​வது எவ்​வளவு கடினம் என்​பதை என்​னால் கற்​பனை செய்து பார்க்க முடிகிறது. ஐஎன்​எஸ் விக்​ராந்த் போர் கப்​பலில் இருந்து வீரர்​களான உங்​களுக்​கும், உங்​கள் குடும்​பத்​தினருக்​கும், நாட்டு மக்​களுக்​கும் தீபாவளி வாழ்த்​துகளை தெரி​வித்துக் கொள்​கிறேன்.

சில மாதங்​களுக்கு முன்​பு, விக்​ராந்த் என்ற பெயர் பாகிஸ்​தான் முழுதும் அச்ச அலைகளை ஏற்​படுத்​தி​யது. அங்​குள்​ளவர்​களுக்கு துாக்​கமில்லா இரவு​களை தந்​தது. அதன் வலிமை அப்​படிப்​பட்​டது. போர் துவங்​கு​வதற்கு முன், எதிரி​யின் தைரி​யத்தை உடைக்​கும் பெயர் பெற்​றது, ஐஎன்​எஸ் விக்​ராந்த்.

நமது கடற்​படை​யால் உரு​வாக்​கப்​பட்ட பயம், விமானப் படை​யால் வெளிப்​படுத்​தப்​பட்ட அசா​தாரண திறமை, நம் ராணுவத்​தின் துணிச்​சல் என முப்​படைகளின் ஒருங்​கிணைப்​பு, ஆபரேஷன் சிந்​துார் நடவடிக்கை பாகிஸ்​தானை விரை​வில் சரணடைய வைத்தது. இவ்​வாறு அவர் பேசி​னார்.

போர்க்​கப்​பலில் இரவு தங்​கிய பிரதமர், கடற்​படை வீரர்​களுடன் இரவு விருந்​தில் கலந்​து​கொண்​டார்​. பின்​னர்​ மறு​நாள்​ காலை ஐஎன்​எஸ்​ விக்​ராந்​தின்​ தளத்​தில்​ யோ​கா பயிற்சி செய்​தார்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in