பிஹார் தேர்தல்: அக்.24-ல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் பிரதமர் மோடி

பிஹார் தேர்தல்: அக்.24-ல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் பிரதமர் மோடி
Updated on
1 min read

பாட்னா: மொத்தம் 243 உறுப்பினர்களைக் கொண்ட பிஹார் சட்டப்பேரவைக்கு நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.

இதனையொட்டி பிரதமர் மோடி அக்.24-ல் பிரச்சாரத்தை தொடங்குகிறார். இது குறித்து பாட்னாவில் இன்று (ஞாயிறு) செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் திலீப் ஜெய்ஸ்வால், “பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி அடுத்த வாரம் பிரச்சாரத்தை தொடங்குகிறார். இந்த மாத இறுதிக்குள் 4 பிரச்சாரப் பேரணிகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. முதலில் வரும் 24-ம் தேதி சமஸ்திபுராவில் பிரச்சாரம் செய்கிறார். அன்றைய தினமே, பெகுசராயில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.” என்றார்.

பிஹார் தேர்தலில் பாஜக மற்றும் ஜேடியு கட்சிகள் இரண்டும் தலா 101 இடங்களில் போட்டியிடுகின்றன. மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) 29 இடங்களில் போட்டியிடுகிறது. உபேந்திர குஷ்வாஹா தலைமையிலான ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா (ஆர்எல்எம்) மற்றும் மத்திய அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சி தலைமையிலான இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (மதச்சார்பற்ற) ஆகிய கட்சிகளுக்கு தலா ஆறு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in