கொல்லப்பட்ட இளைஞரின் குடும்பத்தை சந்தித்த ராகுல்

கொல்லப்பட்ட இளைஞரின் குடும்பத்தை சந்தித்த ராகுல்
Updated on
1 min read

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலியில் திருடன் என நினைத்து தவறுதலாக தாக்கப்பட்டதில் ஹரிஓம் வால்மீகி என்பவர் படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில், ஹரிஓம் வால்மீகியின் (40) வீட்டுக்கு நேற்று காலை நேரில் சென்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அவரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதாகவும் அப்போது அவர் உறுதியளித்தார்.

பின்னர் ராகுல் காந்தி கூறும்போது, “தனது மகன் கொல்லப்பட்டதற்கான நீதியை அவர்கள் கோருகின்றனர். நாடு முழுவதும் தலித்துகளுக்கு எதிராக அட்டூழியங்கள், கொலைகள் மற்றும் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

நீதி வழங்க வேண்டும் என்று உ.பி. முதல்வரிடம் கேட்டுக் கொள்கிறேன். பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மரியாதையாக நடத்தப்பட வேண்டும். குற்றவாளிகளை பாதுகாக்காமல், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in