Last Updated : 17 Oct, 2025 06:09 PM

14  

Published : 17 Oct 2025 06:09 PM
Last Updated : 17 Oct 2025 06:09 PM

சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஒத்துழைக்காத ‘இன்போசிஸ்’ நாராயண மூர்த்தி தம்பதி மீது சித்தராமையா சாடல்

பெங்களூரு: கர்நாடக மாநில அரசு நடத்தும் சாதிவாரி கணக்கெடுப்பில் பங்கேற்க மறுத்ததற்காக ராஜ்யசபா எம்.பி சுதா மூர்த்தி மற்றும் அவரது கணவரும், இன்போசிஸ் நிறுவனருமான நாராயண மூர்த்தி ஆகியோரை கர்நாடக முதல்வர் சித்தராமையா விமர்சித்தார். இன்போசிஸ் நிறுவனர்களாக இருப்பதால் அவர்களுக்கு எல்லாம் தெரியுமா என்றும் அவர் கடுமையாக சாடினார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமையா, “இன்போசிஸ் நிறுவனர்களாக இருப்பதால் 'பிரஹஸ்பதி' (புத்திசாலி) என்று அர்த்தப்படுத்த வேண்டுமா? இது பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான கணக்கெடுப்பு அல்ல, அனைவருக்குமான கணக்கெடுப்பு என்று நாங்கள் 20 முறை கூறியுள்ளோம். மத்திய அரசு வரும் நாட்களில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தும். அவர்கள் அப்போதும் ஒத்துழைக்க மாட்டார்களா? அவர்கள் இன்போசிஸ் என்பதால் எல்லாம் அறிந்தவர்களா?

அவர்களிடம் உள்ள தவறான தகவல்களால் இத்தகைய கீழ்ப்படியாமையைக் காட்டக்கூடும். மாநிலத்தில் சுமார் ஏழு கோடி மக்கள் தொகை உள்ளது. இது அந்த மக்களின் பொருளாதாரம், கல்வி மற்றும் சமூகம் குறித்த கணக்கெடுப்பு ஆகும். அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பேருந்து பயணங்களை வழங்கும் சக்தி மற்றும் பெண் குடும்பத் தலைவிகளுக்கு மாதத்திற்கு ரூ.2,000 வழங்கும் க்ருஹலட்சுமி போன்ற நலத்திட்டங்களில் உயர்சாதிப் பெண்களும், வறுமைக் கோட்டிற்கு மேல் உள்ளவர்களும் பயனடையவில்லையா?” என்று கேள்வி எழுப்பினார்.

முன்னதாக, இன்போசிஸ் நாராயணமூர்த்தி வீட்டிற்கு சாதிவாரி கணக்கெடுப்பாளர்கள் சென்றபோது, அவர்கள், "எங்கள் வீட்டில் கணக்கெடுப்பு நடத்தப்படுவதை நாங்கள் விரும்பவில்லை" என்று கூறியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இந்த சாதிவாரி கணக்கெடுப்பு செயல்முறையில் இருந்து விலகுவதாக அவர்கள் சுய அறிவிப்பு கடிதத்தையும் சமர்ப்பித்தனர்.

கர்நாடகாவின் சமூக - பொருளாதார மற்றும் கல்வி கணக்கெடுப்பு செப்டம்பர் 22-ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 12-ஆம் தேதி பெரும்பாலான மாவட்டங்களில் நிறைவடைந்தது. பெங்களூருவில் இந்த ஆய்வு அக்டோபர் 24 வரை தொடரும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x