அரச மரம் வெட்டப்பட்டதால் அழுத மூதாட்டிக்கு புதிய மரக்கன்று

அரச மரம் வெட்டப்பட்டதால் அழுத மூதாட்டிக்கு புதிய மரக்கன்று
Updated on
1 min read

கைராகர்: சத்​தீஸ்​கர் மாநிலம் கைராகர் மாவட்​டம் சாராகோண்டி கிராமத்​தைச் சேர்ந்த மூதாட்டி தேவ்லா பாய் படேல். அவர் சாலை​யோரம் 20 ஆண்​டு​களுக்கு முன் நட்டு வளர்த்த அரச மரத்​தில் சுவாமி சிலை வைத்து அப்​பகுதி மக்​கள் வழிபட்டு வந்​தனர்.

இந்த மரம் இருக்​கும் இடம் அருகே இம்​ரான் மேமன் என்​பவர் நிலம் வாங்​கி​னார். இதையடுத்து அந்த அரச மரத்தை அவர் வெட்​டி​விட்​டார். இதைப் பார்த்த தேவ்லா பாய் படேல் மரத்​தடி​யில் அமர்ந்து கதறி அழு​தார். இந்த வீடியோ வைரலாக பரவியது.

இந்நிலையில் அரச மரம் வெட்​டப்​பட்ட இடத்​தில் கிராமத்​தினர் சிறப்பு பரி​கார பூஜை செய்து வழிபட்​டனர். மூதாட்டி தேவ்லா பாய் படேலுக்கு ஆறு​தல் அளிக்​கும் வகை​யில், கிராமத்​தினர் புதிய மரக் கன்றை வழங்​கி, வெட்​டப்​பட்ட மரம் அருகே நட வைத்​தனர். அப்​பகுதி எம்​எல்ஏ யசோதா வர்​மா, தேவ்​லா ​பாய்​க்​கு ருத்​​ராட்​சம்​ மரக்​கன்​றை வழங்​கி நட வைத்​தார்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in