99 தேர்தலில் தோற்ற ராகுல்: பாஜக கடும் விமர்சனம்

பாஜக தேசிய செய்தித்தொடர்பாளர் செஷாத் பூனாவாலா
பாஜக தேசிய செய்தித்தொடர்பாளர் செஷாத் பூனாவாலா
Updated on
1 min read

புதுடெல்லி: வெனிசுலா நாட்டில் ஜனநாயகம் மலர போராடிய மரியா கொரினா மச்சாடோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் சுரேந்திரா ராஜ்புத் கூறும்போது, “அரசமைப்பை பாதுகாக்கும் நோக்கில் போராடிய வெனிசுலாவின் எதிர்க்கட்சித் தலைவரான மரியா கொரினா மச்சாடோவுக்கு இந்த முறை அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி, தேசத்தின் அரசமைப்பை காக்கும் போராட்டத்தில் தலைமை வகிக்கிறார்” என்று தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து பாஜக தேசிய செய்தித்தொடர்பாளர் செஷாத் பூனாவாலா கூறும்போது, ‘‘மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு நோபல் பரிசு தரவேண்டும் என்று காங்கிரஸார் எதிர்பார்க்கின்றனர். 99 தேர்தல்களில் தோற்றதற்காக வேண்டுமானால் அவருக்கு நோபல் பரிசு தரலாம். மேலும் கபடநாடகம், பொய்யான தகவல்களைக் கூறுதல், 1975, 1984-ல் ஜனநாயகத்தைக் கொலை செய்ததற்காக வேண்டுமானால் அவருக்கு நோபல் பரிசு வழங்கலாம்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in