Published : 11 Oct 2025 12:51 AM
Last Updated : 11 Oct 2025 12:51 AM
புதுடெல்லி: உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் சர்தார் வல்லபபாய் பட்டேல் வேளாண் பல்கலைக்கழக. வளாகத்தில் விவசாயிகளுக்கான சிறப்பு சந்தை நடைபெறுகிறது.
இதில் வட மாநிலங்களின் விவசாயிகள் பலர் பங்கேற்கின்றனர். ஹரியானாவின் விவசாயியான நரேந்திரசிங்கும் தனது எருமையை இங்கு காட்சிக்கு வைத்துள்ளார். மீரட் சந்தையில் இந்த ஹரியானா மாநில எருமைக்கு ரூ.8 கோடி விலை வைக்கப்பட்டுள்ளது. எனினும், அதன் உரிமையாளர் நரேந்திரசிங் தன் எருமையை விற்பனை செய்ய விருப்பம் இல்லை எனத் தெரிவித்துள்ளார். அந்த எருமைக்கு ‘எம்எல்ஏ’ என அதன் உரிமையாளர் பெயர்சூட்டியுள்ளார்.
இது குறித்து விவசாயி நரேந்திரசிங் கூறுகையில், ‘எனது எருமை முர்ரா எனும் உயர்வகை இனத்தைச் சேர்ந்தது. இதற்கு அன்றாட உணவாக எட்டு லிட்டர் பால், நெய், முந்திரி, பாதாம், பிஸ்தா ஆகியவை உள்ளது. கடந்த 2 வருடங்களாக வட மாநிலங்களின் எந்த சந்தைக்கு சென்றாலும் எனது எம்எல்ஏ-விற்கு சிறப்பு பரிசு கிடைத்து வருகிறது.’ என்றார்.
ஹரியானா விவசாயி நரேந்திரசிங் பத்மஸ்ரீ விருது பெற்றவர். தனது எருமையின் உயிரணுவை விற்று அவர் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான ரூபாய் வருமானம் ஈட்டுகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT