

முன்னாள் மத்திய அமைச்சரும் நடிகருமான சிரஞ்சீவி, இயக்குநர் மணிரத்தினத்தின் கதையை நிராகரித்ததாக தெலுங்கு திரைப்பட வட்டாரத்தில் பேசப்படுகிறது.
சிரஞ்சீவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனிக் கட்சி தொடங்கினார். பின்னர் தனது கட்சியை கலைத்துவிட்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்து மத்திய அமைச்சரானார். சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியை இழந்தது. இதனால் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திரைப்படத்தில் நடிக்க அவர் திட்டமிட்டுள்ளார்.
இதற்காக அவரிடம் பல இயக்குநர்கள், கதாசிரியர்கள் பல்வேறு திரைக்கதைகளை கூறி வருகின்றனர். இதுவரை 149 திரைப்படங்களில் நடித்துள்ள சிரஞ்சீவி, தனது 150-வது திரைப் படம், எந்தவித அரசியலும் கலக் காமல் ஜனரஞ்சகமாக இருக்க வேண்டும் என கருதுவதாக அவரது மகனும் நடிகருமான ராம்சரண் தேஜா தெரிவித்துள்ளார். தனது தந்தை நடிக்க உள்ள அடுத்த திரைப்படத்தை இவர்தான் தயாரிக்க உள்ளார்.
இந்நிலையில், இயக்குநர் மணிரத்தினம் சமீபத்தில் சிரஞ்சீவி யிடம் ஒரு கதையை கூறியதாக வும் அதை அவர் நாசூக்காக மறுத்து விட்டதாகவும் தெலுங்கு திரைப்பட வட்டாரத்தில் பேசப்படு கிறது.
சிரஞ்சீவியின் 150-வது திரைப் பட்ட தலைப்பு என்ன, இயக்குநர் யார், கதாநாயகி யார் என்பதை தெலுங்கு திரைப்பட உலகம் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது.