ரயில் முன்பதிவு டிக்கெட்டின் பயண தேதியை மாற்ற அனுமதி

ரயில் முன்பதிவு டிக்கெட்டின் பயண தேதியை மாற்ற அனுமதி

Published on

புதுடெல்லி: மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது: வரும் ஜனவரி முதல், உறுதி செய்யப்பட ரயில் டிக்கெட்டுகளின் பயணத் தேதியை ஆன்லைனில் எந்தவித கட்டணமும் இல்லாமல் மாற்றிக் கொள்ளலாம்.

தற்போது பயணிகள் தங்கள் பயண தேதியை மாற்ற விரும்பினால் டிக்கெட்டை ரத்து செய்துவிட்டு, புதிய டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும். டிக்கெட் ரத்து செய்யப்படும் நேரத்தைப் பொறுத்து ரத்து கட்டணம் பிடித்தம் செய்யப்படுகிறது.

இந்த நடைமுறை நியாயமற்றது. எனவே பயணிகளுக்கு ஏற்ற புதிய மாற்றங்களை செயல்படுத்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இருப்பினும், புதிய தேதியில் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட் வழங்குவதற்கு எந்த உத்தரவாதமும் தரப்படாது.

இருக்கைகள் இருந்தால் மட்டுமே அவை கிடைக்கும். மேலும் புதிய டிக்கெட்டின் விலை அதிகமாக இருந்தால்,கட்டண வித்தியாசத்தை பயணிகள் செலுத்த வேண்டும். இவ்வாறு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in