Last Updated : 23 Aug, 2018 09:00 AM

 

Published : 23 Aug 2018 09:00 AM
Last Updated : 23 Aug 2018 09:00 AM

தேசியகீதம் பாடுவதை தடுத்த மவுலானா: உ.பி.யில் மதரஸாவின் அங்கீகாரம் ரத்து

உத்தரபிரதேச மதரஸாவில் சுதந்திரதினக் கொண்டாட்டத்தில் தேசியகீதம் பாடப்படுவதை அதன் ஆசிரியரான மவுலானா தடுத்துள்ளார். இது தொடர்பாக வெளியான வீடியோ உண்மை என தெரியவந்ததால் அம்மாநில அரசு மதரஸாவின் அங்கீகாரத்தை ரத்து செய்துள்ளது.

உ.பி.யின் கிழக்குப் பகுதியில் உள்ள மகராஜ்கஞ்ச் மாவட்டம் கொலுஹியின் படேகாவ்னில் அரேபியா அஹ்லே சுன்னத் அன்வரே தய்பா பெண்கள் மதரஸா கல்லூரி உள்ளது. இங்கு கடந்த ஆகஸ்ட் 15-ல் சுதந்திரதின விழா கொண்டாடப்பட்டது. இதன் இறுதியில் மாணவிகள் தேசியகீதம் பாட முயன்றதை மதரஸாவின் முதல்வரான பசல் ரஹ்மான், மூத்த ஆசிரியரான மவுலானா ஜுனைத் அன்சாரி ஆகியோர் தடுத்துள்ளார். தேசிய கீதம் பாடுவதற்கு இஸ்லாத்தில் அனுமதி இல்லை எனவும், ‘ஜன கன மன…’விற்கு பதிலாக ‘சாரே ஜஹான் சே அச்சா…’ பாடலை பாடும்படியும் வற்புறுத்தி உள்ளனர்.

இவர்களின் செயலை அம்மதரஸாவின் மாணவிகள் எதிர்த்ததுடன் மற்ற ஆசிரியர் களும் கண்டித்துள்ளனர். இதன் வீடியோ காட்சிகள், சமூக இணைய தளங்களில் வைரலாகி வெளி யானதால் மதரஸா முதல்வர் மற்றும் மவுலானா அன்சாரி உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது தேசதுரோகம், தேசியகீதத்தை அவமதித்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மாவட்ட சிறுபான்மை நல அதிகாரி பிரதாத்குமார் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தியது. இதில், அதன் வீடியோ காட்சிகள் உண்மை என உறுதியானதையடுத்து அந்த மதரஸாவின் அரசு அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து உபி முஸ்லீம் வஃக்பு மற்றும் ஹஜ் துறை அமைச்சரான மோசீன்ரசா கூறும் போது, ‘‘நமது தேசியகீதத்தை எதிர்ப்பது என்பது தேசவிரோதக் குற்றமாகும். இதை எதிர்ப்பவர்கள் மவுலவி அல்லது பண்டிதர் என யாராக இருப்பினும் அவர்கள் சிறையில் அடைக்கப்பட வேண் டும். தேசியகீதம் பாடக்கூடாது எனக் கூறுவதன் மூலம் குழந்தை களுக்கு தவறானத் தகவல்கள் அளிக்கப்படுகிறது. இதைத்தான் இஸ்லாம் போதிக்கிறதா?’’ எனக் கேள்வி எழுப்பினார்.

அங்கீகாரம் ரத்தான மதரஸா மாணவிகளின் கல்வி பாதிக் கப்படாத வகையில் அவர்கள் அனைவரும் அருகிலுள்ள மற் றொரு மதரஸாவிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x