Published : 23 Aug 2018 09:27 AM
Last Updated : 23 Aug 2018 09:27 AM

வரதட்சணை புகார் வழக்குகளில் கணவரின் உறவினர்களை உரிய ஆதாரமில்லாமல் சேர்க்க கூடாது: உச்ச நீதிமன்றம் உத்தரவு

திருமண பந்தத்தில் ஏற்படும் பிரச்சினை, வரதட்சணை விவ காரம் போன்ற வழக்குகளில் உரிய ஆதாரமில்லாமல் கணவரின் உறவினர்களைச் சிக்க வைக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தெலங்கானாவில் தம்பதியின ருக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக, காவல் நிலையத்தில் மனைவி புகார் அளித்தார். அதில், தனது கணவர் தம்மை உடல் ரீதியாக துன்புறுத்துவதாகவும், அதற்கு அவரது உறவினர்களும் உடந்தையாக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இதன் அடிப் படையில், அப்பெண்ணின் கணவர் மற்றும் அவரது உறவினர்கள் இருவரை போலீஸார் கைது செய்தனர். மேலும், அவர்கள் மூவர் மீதும் கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, தங்கள் மீதான கிரிமினல் வழக்குகளை ரத்து செய்யக் கோரி, ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் உறவினர்கள் இருவரும் மனு தாக்கல் செய் திருந்தனர். அதில், தங்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எவ்வித ஆதாரமும் இல்லாத நிலையில், இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாக அவர்கள் தெரிவித்திருந்தனர். இதனைக் கடந்த 2016-ம் ஆண்டு விசாரித்த உயர் நீதிமன்றம், அவர்களின் மனுவை ரத்து செய்தது.

இதனை எதிர்த்து, அவர்கள் இருவரும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். பல்வேறு கட்ட வாதங்களுக்குப் பிறகு, இதன் மீதான இறுதி உத்தரவை நீதிபதிகள் நேற்று பிறப்பித்தனர். அதில், எந்த ஆதாரமும் இல்லாத சூழ்நிலையில், மனைவி அளிக்கும் புகாரை மட்டுமே அடிப்படையாக வைத்து கணவரின் உறவினர் களை வரதட்சணை உள்ளிட்ட வழக்குகளில் சிக்க வைக்கக் கூடாது என நீதிபதிகள் தெரி வித்தனர். இதையடுத்து, சம்பந் தப்பட்ட மனுதாரர்கள் இருவரை யும் விடுதலை செய்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x