Published : 29 Aug 2018 10:15 AM
Last Updated : 29 Aug 2018 10:15 AM

இவர்கள் மகாத்மா காந்தியையும் கைது செய்யக்கூடியவர்கள்தான்: வரலாற்று அறிஞர் ராமச்சந்திர குஹா பாஜக மீது கடும் தாக்கு

நேற்று 6 மாநிலங்களில் அதிரடி சோதனை மேற்கொண்ட புனே போலீஸார் சமூக செயல்பாட்டாளர்கள், தலித் சமூக ஆர்வலர்கள் வீடுகளில் ரெய்டு நடத்தி 5 பேரைக் கைது செய்ததையடுத்து இதைப்போன்ற அராஜகமான, அடக்குமுறையான சட்ட விரோதச் செயலை வேறு எங்கும் பார்க்க முடியாது என்று வரலாற்றறிஞர் ராமச்சந்திர குஹா கடுமையாக விமர்சித்துள்ளார்.

தலித்துகள் நலன்களுக்காக குரல் கொடுப்போர், சமூக நீதிக்காகப் போராடுபவர்கள், வழக்கறிஞர்கள், அறிவுஜீவிகள் அனைவரையும் அச்சுறுத்தும் விதமாக ஆளும் பாஜக அரசு செயல்படுவதாகக் குற்றம்சாட்டிய ராமச்சந்திர குஹா, ஆளும் கட்சியின் சுயநலவாத, சுரண்டல்வாத கார்ப்பரேட்கள் மீது கடும் குற்றம்சாட்டியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், பழங்குடி இனத்தவர்களின் நிலத்தை அபகரிப்பு செய்து விட வேண்டும், கனிம வளங்களைச் சுரண்ட வேண்டும் அதற்கு இடையூறாக இருக்கும் கடைசி பிரதிநிதிகளை கைது செய்வதுதான் அவர்களுக்கு ஒரே வழி என்று சாடினார்.

பீமா கொரேகான் வரலாறு தொடர்பாக மராத்தியர்களுக்கும் தலித்துகளுக்கும் கடந்த ஆண்டு மோதல் ஏற்பட்டுள்ளது. பிரிட்டிஷ் வெற்றியை எப்படி கொண்டாடலாம் என்பது வலதுசாரிகள் வாதம், உயர்சாதி மராத்தியர்க்ளுக்கு எதிரான கொரேகான் பீமா போரில் மஹர் தலித்துகளின் வெற்றி அது, அதனைக் கொண்டாடுவோம் என்பது தலித் தரப்பு வாதம் இதனையடுத்து கடும் வன்முறை மூண்டது. இந்த விவகாரம் தொடர்பாகவே தற்போதைய ரெய்டு படலம் தொடங்கியுள்ளது. ஆனால் கைது செய்யப்பட்டவர்கள், ரெய்டுகள் தலித்துகளை பிரதிநிதித்துவம் செய்தவர்கள் மீதே.

இந்நிலையில் ராமச்சந்திர குஹா தனியார் தொலைக்காட்சிக்குக் கூறும்போது, கைது செய்யப்பட்டவர்களில் சிலரைத் தனக்குத் தெரியும் என்றும் ஆனால் அவர்களுடன் தான் எப்போதும் ஒத்துப் போகமாட்டேன் என்றும் கூறிய அதேவேளையில் இவர்கள் வன்முறையைச் செய்பவர்களும் அல்ல, அப்படிப் பேசுபவர்களும் அல்ல, என்றார்.

“ஆனால் இவர்கள் அனைவரும் நாட்டில் ஒடுக்கப்பட்டவர்கள், நலிவுற்றோர் சார்பாக பிரதிநிதித்துவம் செய்பவர்கள். இந்தியாவில் ஆதிவாசி பகுதிகளில் என்ன நடக்கிறது? கொலை, பாலியல் வன்கொடுமை, சுரண்டல், இந்த மக்களுக்காக வழக்கறிஞராகச் செயல்படுபவர்கள் இவர்களில் சிலர். இவர்களைக் கைது செய்வதால் பழங்குடி மக்களுக்காக நீதிமன்றத்தில் பேச ஒருவரும் இல்லை” என்று கூறியுள்ளார் ராமச்சந்திர குஹா.

மேலும் தன் ட்விட்டர் பக்கத்தில், “காந்தியின் சரிதையை எழுதியவன் என்ற முறையில் கூறுகிறேன் இன்று மகாதமா காந்தி இருந்திருந்தால் வழக்கறிஞர்களுக்கான சீருடையுடன் கைது செய்யப்பட்ட சுதா பரத்வாஜ் உள்ளிட்டோருக்காக வாதிட்டிருப்பார், இதுவும் கூட மகாத்மா காந்தி உயிருடன் இருந்து மோடி அரசு அவரையும் கைது செய்யாமல் இருந்திருந்தால் சாத்தியம்” என்று பதிவிட்டுள்ளார்.

அருந்ததி ராய், இந்திரா ஜெய்சிங் ஆகியோரும் இந்த அடக்குமுறையைக் கடுமையாக எதிர்த்துள்ளனர். இந்திரா ஜெய்சிங், “ சட்டத்தைப் பாதுகாக்க ஒருநாள் யாருமில்லாமல் போய்விடுவார்கள், ஒருநாள் பாதுகாக்க வேண்டும் என்ற சட்டமும் கூட இல்லாமல் போய் விடும்” என்றார்.

அருந்ததி ராய் ஒரு அறிக்கையில், “இது நெருக்கடி நிலைப் பிரகடனத்தை ஒத்ததே” என்று சாடியுள்ளார்.

ஆனால் ராமச்சந்திர குஹா காங்கிரஸையும் விட்டுவைக்கவில்லை, “சமூக செயல்பாட்டாளர்கள், அறிவுஜீவிகளை வேட்டையாடுவது காங்கிரஸால் தொடங்கப்பட்டது, தற்போதைய அரசு இதனை இன்னும் விரிவாகச் செயல்படுத்துகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x