ரயிலில் இருந்து 2000 கி.மீ தூரம் வரை தாக்கும் அக்னி - ப்ரைம் ஏவுகணை சோதனை வெற்றி: ராஜ்நாத் சிங் பெருமிதம்

ரயிலில் இருந்து 2000 கி.மீ தூரம் வரை தாக்கும் அக்னி - ப்ரைம் ஏவுகணை சோதனை வெற்றி: ராஜ்நாத் சிங் பெருமிதம்
Updated on
1 min read

புதுடெல்லி: ரயிலில் இருந்து மொபைல் லாஞ்சர் மூலமாக 2,000 கி.மீ. வரையிலான இலக்கை தாக்கும் அக்னி - ப்ரைம் ஏவுகணையை வெற்றிகரமாக ஏவியதற்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்தார்.

இது தொடர்பாக ராஜ்நாத் சிங் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “ரயிலில் இருந்து மொபைல் லாஞ்சர் மூலமாக அக்னி - ப்ரைம் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக ஏவியுள்ளது. இந்த அடுத்த தலைமுறை ஏவுகணை 2000 கி.மீ. வரையிலான இலக்கை தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இது பல்வேறு மேம்பட்ட அம்சங்களையும் கொண்டுள்ளது.

நகரும் ரயில்களின் மூலம் ஏவுகணைகளை ஏவும் அமைப்பை உருவாக்கிய நாடுகளின் வரிசையில் இந்தியாவும் சேர்ந்துள்ளது. இந்த அக்னி - ப்ரைம் ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்ததற்காக டிஆர்டிஓ, எஸ்எஃப்சி மற்றும் ஆயுதப்படைகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த வகை ஏவுகணை ரயில் நெட்வொர்க் மூலம் நகரும் திறனைக் கொண்டுள்ளது. இதன் மூலமாக நாடு முழுவதிலும் இருந்து, குறுகிய நேரத்தில் நமது எதிர்வினையை தொடங்க முடியும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in