இந்தியா - பாக். மோதல் யாருடைய தலையீட்டாலும் நிறுத்தப்படவில்லை: ராஜ்நாத் சிங்

இந்தியா - பாக். மோதல் யாருடைய தலையீட்டாலும் நிறுத்தப்படவில்லை: ராஜ்நாத் சிங்

Published on

ஹைதராபாத்: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு இந்தியா-பாகிஸ்தான் மோதல் எந்தவொரு மூன்றாம் தரப்பு தலையீட்டாலும் நிறுத்தப்படவில்லை என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.

ஹைதராபாத்தில் உள்ள பரேட் மைதானத்தில் இன்று மத்திய அரசு ஏற்பாடு செய்த 'ஹைதராபாத் விடுதலை தின' கொண்டாட்டங்களில் கலந்துகொண்டு பேசிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், “பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் இந்தியாவின் சமூக நல்லிணக்கத்தின் மீது நடத்தப்பட தாக்குதலாகும். எதிர்காலத்தில் இதுபோல ஏதேனும் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்தால் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மீண்டும் தொடங்கும்.

யாருடைய தலையீட்டாலும் பயங்கரவாதிகளுக்கு எதிரான அந்த நடவடிக்கை நிறுத்தப்படவில்லை. சிலர் இந்தியா-பாகிஸ்தான் மோதலை நிறுத்தியதாகக் கூறுகின்றனர், யாரும் அதைச் செய்யவில்லை.

இந்தியா பாகிஸ்தான் மோதலை நிறுத்துவதில் எந்த மூன்றாம் தரப்பு தலையீட்டையும் இந்தியா நிராகரித்ததாக பாகிஸ்தான் துணைப் பிரதமர் தெளிவுபடுத்தினார். இது ஒரு இருதரப்பு பிரச்சினை என்றும், மூன்றாம் தரப்பு தலையிட முடியாது என்றும் பிரதமர் மோடி தெளிவுபடுத்தினார்.” என்று அவர் கூறினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in