16-வது முப்படை தளபதிகள் மாநாடு கொல்கத்தாவில் தொடங்கினார் பிரதமர் 

16-வது முப்படை தளபதிகள் மாநாடு கொல்கத்தாவில் தொடங்கினார் பிரதமர் 
Updated on
1 min read

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் விஜய் துர்க் பகுதியில் உள்ள இந்திய ராணுவத்தின் கிழக்கு பிராந்திய தலைமையக வளாகத்தில் 16-வது முப்படை தளபதிகள் மாநாட்டை (சிசிசி) பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார்.

3 நாட்களுக்கு நடைபெறும் இம்மாநாட்டில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படை தலைமை தளபதி அனில் சவுகான், பாதுகாப்புத் துறை செயலாளர் ராஜேஷ் குமார் சிங் மற்றும் முப்படை தளபதிகள் பங்கேற்கின்றனர்.

2 ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த மாநாட்டில் உயர் அதிகாரிகளும் ராணுவ உயர் அதிகாரிகளும் ஒன்றிணைந்து, போர்த்திறம் குறித்த கருத்துகளை பரிமாறிக் கொள்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in