“நேபாளத்தில் அமைதி திரும்ப வேண்டும்” - பிரதமர் மோடி வேண்டுகோள்

“நேபாளத்தில் அமைதி திரும்ப வேண்டும்” - பிரதமர் மோடி வேண்டுகோள்
Updated on
1 min read

புதுடெல்லி: நேபாளத்தின் ஸ்திரத்தன்மை, அமைதி மற்றும் செழிப்பு எங்களுக்கு மிகவும் முக்கியம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் “இன்றைய சுற்றுப்பயணத்திலிருந்து திரும்பிய பிறகு, பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு கூட்டத்தில் நேபாளத்தில் நடந்த நிகழ்வுகள் குறித்து விரிவான விவாதம் நடைபெற்றது. நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வன்முறை மனதை வேதனைப்படுத்துகிறது. பல இளைஞர்கள் உயிரிழந்திருப்பது என் இதயத்தை மிகவும் வருத்தப்படுத்துகிறது. நேபாளத்தின் ஸ்திரத்தன்மை, அமைதி மற்றும் செழிப்பு ஆகியவை மிக முக்கியமானவை. நேபாளத்தில் உள்ள எனது அனைத்து சகோதர சகோதரிகளும் அமைதியையும் சட்ட ஒழுங்கையும் பராமரிக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.” என்று பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

நேபாளத்தில் ஃபேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம், எக்ஸ் உள்ளிட்ட பதிவு செய்யப்படாத 26 சமூக வலைதளங்களுக்கு நேபாள அரசு தடை விதித்ததைக் கண்டித்தும், ஆட்சியாளர்களின் ஊழலைக் கண்டித்தும் தலைநகர் காத்மாண்டுவில் இளைஞர்களின் போராட்டம் தீவிரமடைந்தது. சமூக ஊடக தடைக்கு எதிரான போராட்டம், ஊழலுக்கு எதிரான போராட்டமாகவும் வலுப்பெற்றதோடு, அரசாங்கத்துக்குள்ளும் எதிர்ப்புகள் எழுந்ததை அடுத்து பிரதமர் கே.பி.சர்மா ஒலி இன்று பிற்பகல் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

முன்னதாக, சமூக வலை​தளங்​கள் மீதான தடையை விலக்க கோரி​யும், நாட்​டில் பரவி​யுள்ள ஊழல் கலாச்​சா​ரத்​துக்கு முற்​றுப்​புள்ளி வைக்கக் கோரி​யும் நேற்று ஆயிரக்​கணக்​கான இளைஞர்கள் ஒன்று திரண்டு தலைநகர் காத்​மாண்​டு​வில் பேரணி நடத்​தினர். அப்​போது, நாடாளு​மன்​றத்​துக்கு வெளியே போடப்​பட்​டிருந்த தடுப்​பு​களை தாண்டி உள்ளே நுழைய போ​ராட்​டக்​காரர்​கள் முயன்​றனர். நேபாள பிரதமர் சர்மா ஒலி வீட்​டின் மீதும் கற்​களை வீசி தாக்​குதல் நடத்​தினர்.

இதையடுத்​து,போ​ராட்​டக்​காரர்​களுக்​கும் பாது​காப்பு படை​யினருக்​கும் இடையே மோதல் மூண்​டது. பாதுகாப்பு படை​யினர் கண்​ணீர் புகை குண்​டு​களை வீசி​யும், ரப்​பர் தோட்​டாக்​களால் சுட்​டும், தண்​ணீரை பீய்ச்​சி​யடித்​தும் போ​ராட்​டக்​காரர்​களை கலைக்க முயன்​றனர். இதுவரை இந்த கடும் மோதலில் 22 பேர் உயி​ரிழந்​துள்ளனர். 500-க்​கும் மேற்​பட்​டோர் காயமடைந்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in