“யாருடைய தாயையும் அவதூறாக பேசக் கூடாது; ஆனால், பிரதமர் மோடி...” - தேஜஸ்வி யாதவ் கருத்து

“யாருடைய தாயையும் அவதூறாக பேசக் கூடாது; ஆனால், பிரதமர் மோடி...” - தேஜஸ்வி யாதவ் கருத்து
Updated on
2 min read

பாட்னா: பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் குறித்து அவதூறாகப் பேசிய விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள தேஜஸ்வி யாதவ், யாருடைய தாயையும் அவதூறாகப் பேசக் கூடாது என்றும், அதை தாங்கள் ஆதரிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

பிரதமர் மோடியின் தாய் குறித்து அவதூறாகப் பேசியதைக் கண்டித்து பிஹாரில் நாளை (செப்.4) முழு அடைப்புப் போராட்டம் நடைபெறும் என்று தேசிய ஜனநாயகக் கூட்டணி அறிவித்துள்ளது. இண்டியா கூட்டணியைச் சேர்ந்தவர்கள் விரக்தி காரணமாக அவதூறு கருத்துகளைத் தெரிவித்து வருவதாக மத்திய அமைச்சர் அன்னப்பூர்ணா தேவி விமர்சித்துள்ளார்.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவரும், பிஹார் மாநில சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ், "யாருடைய தாயாரையும் அவதூறாகப் பேசக் கூடாது. இதை நாங்கள் ஆதரிக்கவில்லை. இது நமது கலாச்சாரமல்ல. ஆனால், சோனியா காந்தி குறித்து பிரதமர் மோடி அவதூறாகப் பேசி இருக்கிறார். நிதிஷ் குமாரின் டிஎன்ஏ குறித்தும் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

பாஜக எம்எல்ஏக்கள் பலர் எனது தாயாரை, சகோதரிகளை சட்டப்பேரவையிலேயே அவதூறாகப் பேசி இருக்கிறார்கள். பாஜக செய்தித்தொடர்பாளர்கள், தொலைக்காட்சி நேரலையிலேயே பெண்களை அவதூறாகப் பேசுகிறார்கள். பிஹார் மக்களுக்கு அனைத்தும் தெரியும். வெளிநாட்டில் பல நாட்கள் இருந்த பிரதமர் மோடி, நாடு திரும்பிய பிறகு அழத்தொடங்கி இருக்கிறார். ஆனால், வெளிநாட்டில் இருந்தபோது சிரித்துக்கொண்டிருந்தார்" என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பிஹார் மாநிலத்​தில் காங்​கிரஸ் முன்​னாள் தலை​வர் ராகுல் காந்தி தலை​மை​யில் ‘வாக்​காளர் அதி​கார யாத்​திரை’ நடை​பெற்றது. தர்​பங்கா நகரில் சமீபத்​தில் நடை​பெற்ற பேரணி​யின்​போது, அடை​யாளம் தெரி​யாத நபர் ஒரு​வர் பிரதமர் நரேந்​திர மோடி மற்​றும் அவரது மறைந்த தாயார் குறித்து அவதூறான கருத்து தெரி​வித்​துள்​ளார். இந்த வீடியோ சமூக வலை​தளங்​களில் வைரலாக பரவியது. இதற்கு பிஹார் முதல்​வர் நிதிஷ் குமார் மற்​றும் பாஜக​வினர் கடும் கண்​டனம் தெரி​வித்​தனர்.

இந்​நிலை​யில், பிஹாரில் நேற்று நடை​பெற்ற ஒரு நிகழ்ச்​சி​யில் காணொலி மூலம் பங்​கேற்ற பிரதமர் நரேந்​திர மோடி, "பாரம்​பரியமிக்க பிஹாரில் சில தினங்​களுக்கு முன்பு நிகழ்ந்​ததை என்​னால் கற்​பனை செய்​து​கூட பார்க்க முடிய​வில்​லை. பிஹாரில் ஆர்​ஜேடி - ​காங்​கிரஸ் சார்​பில் நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் என் தாய் பற்றி அவதூறாக பேசி உள்​ளனர்.

அந்த அவதூறு கருத்து என் தாய்க்கு மட்​டும் அவமானம் அல்ல. நாட்​டில் உள்ள தாய்​மார்​கள், சகோதரி​கள் மற்​றும் மகள்​கள் உள்​ளிட்ட அனை​வருக்​கும் அவமானம். இதைக் கேட்​டு, பார்த்த பிறகு ஒவ்வொரு தாயும் எப்​படி மனம் வருந்தி இருப்​பீர்​கள் என்​பது எனக்​குத் தெரி​யும். என் இதயத்​தில் எவ்​வளவு வலி இருக்​கிறதோ அதே வலி பிஹார் மக்​களுக்​கும் இருக்​கும் என்​பது எனக்​குத் தெரி​யும்.

உங்​களைப் போன்ற கோடிக்​கணக்​கானவர்​களுக்கு நான் சேவை செய்ய வேண்​டும் என்​ப​தற்​காக என் தாய் என்னை அவரிட​மிருந்து பிரித்​தார். என் தாய் இப்​போது உயிருடன் இல்லை என்​பது உங்​களுக்கு தெரி​யும். அரசி​யலுடன் எந்​தத் தொடர்​பும் இல்​லாத, அவரைப் பற்றி காங்​கிரஸ், ஆர்​ஜேடி நிகழ்ச்​சி​யில் அவதூறாக பேசி உள்​ளனர். சகோ​தரி​களே, தாய்​மார்​களே நீங்​கள் உணர்ந்த வலியை என்​னால் உணர முடிகிறது. இது மிக​வும் வேதனை​யானது. ராயல் குடும்​பத்​தில் பிறந்த இளவரச​ரால் ஏழைத்தா​யின் வலியை புரிந்​து​கொள்​ள முடி​யாது" என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in